வடசென்னையில் கலக்கும் உணவுப் பெண்கள்


வடசென்னையில் கலக்கும் உணவுப் பெண்கள்

பெண்கள் சமைப்பதில் எப்போதுமே கில்லாடிகள். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பெண்கள் சிலர் குழுவாக இணைந்து மாடியில் உணவகம் நடத்தி வருகின்றனர். விதவிதமான அசைவ  உணவுகளைக் கொண்டு தினந்தோறும் விருந்து பாணியில் உணவு தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

ரேவதி அம்மாவின் தலைமையில் இயங்கும் பெண்கள்தான் இந்த உணவகத்தை செயல்படுத்துகின்றனர். இவர்களின் உணவு தந்த ருசியால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தினமும் தேடி வந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். இவர்களின் சுவையும், கைபக்குவமும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகி உள்ளது. மெட்ராஸ் ஸ்டீரிட் ஃபுட் முகநூல் பக்கத்தில் இவர்களை பற்றி பதியப்பட்டுள்ள வீடியோவை ஆயிரகணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர். நாளுக்கு நாள் இவர்களது உணவகத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. மதிய சாப்பாடு மட்டும்தான் இவர்கள் கொடுக்கின்றனர். தினமும் மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை இவர்களின் கடை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை உணவகத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. அளவில்லா மீன் சாப்பாடு 60 ரூபாய் மட்டும்தான்.இதே போலத்தான் பிற உணவுகளும் குறைந்த விலையில் தரமாக கிடைக்கின்றன.


Comments


View More

Leave a Comments