இந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜில் வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்


பிரிட்ஜில் வைத்தால் கெட்டுப்போகாது என்ற எண்ணம் நம்மிடம் அதிகம் வளர்ந்து விட்டது. அந்த எண்ணம் உண்மையல்ல. சில பொருட்களை பிரிட்ஜில் வைக்கக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பாக வெங்காயத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அது பெரிய வெங்காயமாக இருந்தாலும், சிறிய வெங்காயமாக இருந்தாலும் இரண்டையும் பிரிட்ஜில் வைக்க் கூடாது. காற்றுப் புகும் இடத்தில்தான் வெங்காயத்தை வைக்க வேண்டும்.

நம் உடல் ஆரோக்கியத்துக்கு அருமருந்தாக இருக்கும் தேனையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. பிரிட்ஜில் வைப்பதால் தேனின் இயற்கை சுவையில் மாற்றம் ஏற்படும். மருத்துவ குணம் இல்லாமல் போய்விடும்.

பேக்கரிகளில் விற்கப்படும் பிரட்களை வாங்கும்போதே எவ்வளவு நம்மால் உண்ண முடியும் என்று தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது. ஏனெனில் பிரட் ஆயுள்காலம் மிகவும் குறைவு. வாங்கி பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம் என்று நினைக்கவே கூடாது. பிரட் கொஞ்சமாக வாங்கி ஒரு நாளில் சாப்பிட்டு முடித்து விட வேண்டும். பிரிட்ஜில் வைத்து மறுநாள் எடுத்து சாப்பிட வேண்டும் என்று திட்டமிடாதீர்கள். பிரட்டை பிரிட்ஜில் வைப்பதால் அதன் புத்தம் புதிய பிரஷ் தன்மை போய்விடும். வறண்டு போய்விடும். சாப்பிடுவதற்கு சுவையாக இருக்காது.

இதே போல வெயில் காலத்தில் தர்பூசணி, முலாம் பழம் ஆகியவற்றையும் பிரிட்ஜில் வைத்து சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. இதுவும் தவறான ஒன்று. நீர் சத்து மிகுந்த தர்பூசணி உள்ளிட்ட பொருட்களை பிரிட்ஜில் வைக்க்கூடாது.


Comments


View More

Leave a Comments