இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்…
இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, இரத்த அழுத்தம் சீராக இருப்பது முதல் இதயத்தை பாதிப்பது வரை உணவு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில உணவு முறைகள் எடை இழப்புக்கு காரணமாக இருக்கின்றன. சில உணவுகள் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானவையாகவும் இருக்கின்றன..
குறிப்பிட்ட வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு வகைகள் போன்ற தனிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் ( முட்டை போன்ற கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகள்) ஆகியவற்றில் உணவு மற்றும் இதய நோய்களுக்கு இடையேயான தொடர்பைப் பற்றிய பல வருட ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி சில ஆச்சர்யங்களை அளிப்பதாக உள்ளது. சில விடை தெரியாதவையாகவும் இருந்தன. மக்கள் உணவை உண்கிறார்கள், இதயத்துக்கு ,ஊட்டச்சத்துக்களை உண்பதில்லை. .
Must Read: நீர் சத்து குறைபாடு; ஐந்து எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளவும்…
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொட்டைகள், மீன், கோழி மற்றும் தாவர எண்ணெய்கள் நிறைந்த உணவு இதய நோய் வராமல் தடுப்பதற்கான சிறந்த உணவுகளாகும். சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை, சோடியம் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் கொண்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த உணவு முறையை மேற்கொள்வோருக்கு இதய நோய்க்கான ஆபத்து 31% குறைவு, நீரிழிவு நோய்க்கான ஆபத்து 33% மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் 20% குறைவாக இருக்கிறது. ஆலிவ் எண்ணெய் அல்லது கொட்டைகள், நிறைவுறா கொழுப்பின் வளமான ஆதாரங்கள் கொண்ட உணவுகளை நான்கரை வருடங்களுக்கும் மேலாக எடுத்துக்கொண்ட இதய நோயாளிகள் குறித்து தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் எடுத்துக் கொண்ட உணவின் வாயிலாக இதயநோய் பாதிப்பு குறைந்ததாக ஆராய்ச்சி காட்டுகிறது]
2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வில், ஆரோக்கியமான உணவு முறைகளை அதிகம் கடைப்பிடிப்பவர்களுக்கு இருதய நோய்க்கான ஆபத்து 14% முதல் 21% வரை குறைவாக இருப்பது தெரியவந்தது. சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடைய தாதுக்களாகும்., அவை ஆரோக்கியமான இதயம் மற்றும் ரத்த அழுத்தத்தை பராமரிப்பதற்கு முக்கியமானவையாகும். அதிக பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மற்றும் குறைந்த உப்பு உணவுகளை உட்கொள்வது இருதய நோய் அபாயத்தை கணிசமாகக் குறைக்கலாம். குறிப்பாக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களில். பொட்டாசியம் உள்ளது,
தப்படுத்தப்பட்ட ரொட்டி, பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள், துரித உணவு உணவுகள் போன்ற சோடியம் நிறைந்த உணவுகளை குறைந்த பொட்டாசியம் உணவை உட்கொள்வது உங்கள் இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம். உங்களை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மொத்த உணவு முறை மிகவும் முக்கியமானது. ஏனெனில் எந்த ஒரு உணவும் தனிப்பட்ட முறையில் உங்களை அற்புதமாக ஆரோக்கியமாக்க முடியாது. வறுத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை தின்பண்டங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் இயற்கை உணவை அடிப்படையாகக் கொண்ட கடல் உணவு அல்லது வேளாண் பண்ணையில் இருந்து புதியதாக கிடைக்கும் காய்கறிகள் இதயத்துக்கு ஆரோக்கியமானவை.
-பா.கனீஸ்வரி
#FoodsForHeartHealthy #HeartHealthyFoods #HeartHealthy
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More