உலக காஃபி தினம் உற்சாக தரும் காஃபி பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம்...
நாள் ஒன்றுக்கு மூன்று முறை காஃபி குடிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு உடனடியாக ஆற்றல் தரும் திறனை அளிப்பதில் காஃபி முக்கிய பங்கு வகிக்கிறது.
கும்பகோணம் டிகிரி காஃபி, மெட்ராஸ் காஃபி, மயிலாப்பூர் காஃபி என்று விதம் விதமான காஃபி தமிழகத்தில் கிடைக்கிறது. அனைத்து வகை காஃபிகளும் அதன் அதன் சுவையில் தனித்து இருக்கின்றன.
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 200 கோடி கோப்பைகள் காஃபி பருகுகின்றனர். காஃபி வர்த்தகம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் வர்த்தகம் நடக்கும் பொருட்களில் பெட்ரோலுக்கு அடுத்து மனிதனுக்கு போடப்படும் பெட்ரோல் அதாவது காஃபிதான் முக்கிய பங்கு வருகிறது.
இப்போது கருப்பட்டி காஃபி, நாட்டு சர்க்கரை காஃபி என்று விதம் விதமான சுவைகளில் காஃபி விற்பனை சூடுபிடித்துள்ளது. ஒரு நாளின் தொடக்கம் என்பது ஒரு நல்ல காஃபியின் சுவையுடன் தொடங்கினால் அந்த நாள் சிறக்கும்.
Comments