ராஜஸ்தானில் ஒரு அம்மா உணவகம்


தமிழகத்தில் அம்மா உணவகம் கடந்த ஜெயல லிதா ஆட்சியில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட தருணத்தில் அம்மா உணவகம் மிகவும் வரவேற்பு பெற்றதாக விளங்கியது. பின்னர் நாளடைவில் சில அம்மா உணவகங்கள் மூடப்பட்டன. கொரோனா தொற்று காலத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பெருநகரங்களில் நகராட்சி பகுதிகளில் உணவின்றி தவிப்பவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் அ.தி.மு.க செலவில் அம்மா உணவகங்களில் இலவச  உணவுகள் வழங்கப்பட்டன. இப்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போதும் அம்மா உணவகங்கள் மட்டும்தான் திறக்கப்படுகிறது. மொத்த த்தில் இந்த ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகத்தின் சேவை மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருந்தது.

அம்மா உணவகத்தின் மாடலில் ஆந்திரா, கர்நாடகாவில் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதே போல இப்போது ராஜஸ்தானில் எட்டுரூபாய் விலையில் உணவு வழங்கும் இந்திரா ராசாய் யோஜனா எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு எட்டு ரூபாய் விலையில் 100 கிராம் பருப்பு வகைகள், 100 கிராம் காய்கறிகள், 250 கிராம் சப்பாத்தி, ஊறுகாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

ராஜஸ்தானில் குறைந்த விலை உணவகங்கள் காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 5  மணியில் இருந்து இரவு எட்டு மணி வரையிலும் செயல்படும். இந்த உணவகங்களுக்காக மாநில அரசு ஒருவருக்கு 12  ரூபாய் மானியம் வழங்குகிறது. ஆண்டுக்கு 100 கோடி ரூபாயை பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது.

இந்த திட்டம் முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 213 நகராட்சிகளில் தொடங்கப்பட்டுள்ளது. ஜெயப்பூர் மாநகராட்சியில் 10 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை  மாநில முதல்வர் அசோக் கெய்லாட் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் கடந்த  வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 


Comments


View More

Leave a Comments