
உலக சைவ உணவு உண்போர் தினத்தில் சைவ உணவுகளின் சிறப்புகளை அறிந்து கொள்வோம்…
ஆண்டு தோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் சைவ உணவு சாப்பிடுவோர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் குறித்த ஐந்து முக்கிய தகவல்களை இப்போது பார்க்கலாம்.
(1)1977-ம் ஆண்டு வட அமெரிக்காவில் உள்ள சைவ சங்கம் என்ற அமைப்புதான் உலக சைவ உணவு சாப்பிடுவோர் தினத்தை அறிவித்தது.
(2)சைவ உணவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள பச்சை காய்கறிகள், பழங்களில் வைட்டமின் சி, டி மற்றும் மினரல்கள் உள்ளன. இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
Must Read: “நுரை ததும்பும் காபியை, சிப் சிப்பாக சுவைக்க வேண்டும்..”
(3)அனைத்து வகை உணவுகளிலும் பயன்படுத்தப்படும் தக்காளியில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், தியாமின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, சி, கே போன்றவை நிறைந்துள்ளன.
(4)பச்சைக்காய்கறிகளில் முதன்மையானதாக கருதப்படும் கீரைகளில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. குறிப்பாக, கீரை சாப்பிடும் ஒருவருக்கு, சுவாச பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். நமது உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.
(5)அசைவ உணவு உண்பவர்களை விடவும் சைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் டைப் 2 நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
#WorldVegetarianDay2022 #HealthyVegFoods #VegFoodsBenefits
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments