உடலில் ஆற்றலை அதிகரிக்கும் இந்த உணவு பொருட்களை சாப்பிடுங்கள்...
நமக்கு ஆற்றல் தருவதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு. மனம் சோம்பலாக உணரும் போது நடைபயிற்சி செல்லக் கூட நாம் தயங்குவோம். நடைபயிற்சி செல்லாத நாளில் சோம்பல் அதிகரிக்கும். சோம்பல் தன்மையை குறைத்து நம்மை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கு சில உணவுகள் உள்ள. அவை என்னவென்று பார்க்கலாம்.
நம் உடலில் ஆற்றல் குறைந்து டல் ஆக நாம் உணரும் போது பாதாம் பருப்பு உண்டால், மீண்டும் சுறுசுறுப்பையும் ஆற்றலையும் பெறலாம். பாதம் பருப்பு நமது செரிமாணத்தையும் சரி செய்கிறது. சோம்பலை விரட்டுகிறது. மூளையின் திறனை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதில் பாதாம் பருப்புக்கு முக்கிய பங்கு உண்டு.
நாம் வழக்கமாக சாப்பிடும் வெள்ளை அரிசியில் நார்சத்து இருந்தபோதிலும், சிகப்பரிசியில் சமைத்து உண்டால் இன்னும் கூடுதல் சத்து கிடைக்கும். சிகப்பு அரியில் சமைத்து உண்ணும்போது நார்சத்து அதிகம் கிடைக்கிறது. சிகப்பு அரிசி எளிதில் ஜீரணம் ஆகும்.
உடனடி ஆற்றல் கிடைக்க வாழைப்பழங்கள் சாப்பிடுவது மிகவும் சிறந்த து. ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன், வாழைபழத்தில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வைட்டமின் பி 6, பொட்டாசியம் ஆகிய சத்துகள் உள்ளன. நடைபயிற்சிக்கு முன்பும், பின்பும் வாழைப்பழம் சாப்பிடலாம்.
வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சிட்ரஸ் வகைப்பழங்கள் என்று அழைக்கின்றனர். தமிழில் சொல்ல வேண்டும் என்றால் ஆரஞ்சு பழங்கள் எனலாம். ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடலாம். இதன் மூலம் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கடல் உணவில் மிகவும் ஆரோக்கியமான உணவு மீன். இது நமது உடலில் சுறுசுறுப்பை தக்க வைக்கிறது. மீன் சாப்பிடுவதால், ஒமேகா 3 எனும் கொழுப்பு வகை நமக்கு கிடைக்கிறது. இது உடல் ஆரோக்கியத்தைத் தக்கவைக்கும்.
Comments