நாம் ஏலக்காயுடன் ரசாயனங்களையும் சேர்த்து உண்கின்றோமா?
ஏலக்காவை எல்லாம் அப்படியே சமையலில் பயன்படுத்துவோம். பாத்திரத்துல கொட்டுற ஏலக்காவுல பதினாலு வகை பூச்சிகொல்லி மருந்து இருக்காம். கூடவே பச்சை கலருக்காக கலர் பொடியும் சேர்க்கும் சங்கதியும் நடக்கிறது.
பறிக்கும் ஏலக்காவை எல்லாம் செட்டுக்கு கொண்டு போயிடுவாங்க. அங்கே 6,8,10 என்று தரம்பிரிப்பார்கள். கூடவே பளபளக்கும் பச்சை நிறத்திற்காக பச்சைநிற கலர்பொடி சேர்த்து உலர வைப்பார்கள். இந்த கலர் ஏலக்காவுடனேயே கலந்துவிடும்.14+1 = 15 வகை கெமிக்கல்கள் ஏலக்காவுடன் நம் வயிற்றுக்குள் செல்கிறது.
Must Read: பிறந்த குழந்தை சரியான முறையில் தான் உடல் எடை கூடுகிறதா?
ஏலக்காய் விவசாயிகளிடம் பேசி பாருங்கள். பூச்சி மருந்து அடிக்காமல் ஏலக்காய் விவசாயம் பண்ணவே முடியாது என்று அடித்து சொல்வார்கள்.ஆனால் நிச்சயம் ழுடியும்.
சிக்கிம் மாநிலத்தில் பெருவாரியாக இயற்கையில் விளைவிக்கிறார்கள். உத்ரகாண்ட் மாநிலத்தில் சில பகுதிகளிலும், கொல்லிமலையில் ஒருசிலரும் இயற்கையில் ஏலக்காய் விளைவிக்கிறார்கள்.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அடிமாலி பகுதியில் ஒருசில ஆதிவாசி குடியிருப்பு மக்களும் ஏலக்காயை இயற்கை முறையில் விளைய வைக்கிறார்கள். அடிமாலி இயற்கை ஏலக்காய் ஊரே மணக்கும் அளவு தரம் வாய்ந்தது. ஆனால் பார்க்க அத்தனை அழகு இருக்காது. நான் எனது அங்காடிக்கு அடிமாலிக்கு நேரில் சென்றுதான் ஆதிவாசி குடிகளில் இருந்து ஏலக்காய் வாங்கி வருகிறேன்.
#adimalicardamom #Keralacardamom #BestQualitycardamom
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments