முழு ஊரடங்களில் எளியவர்களின் பசியாற்றும் திருச்சி அரிமா சங்கம்
முழு ஊரடங்கு காரணமாக பலர் உணவின்றி தவிக்கின்றனர். வீடு இல்லாமல் தெருவோரங்களில் வசிப்பவர்கள் தினந்தோறும் பசியோடு பொழுதைக் கழிக்கின்றனர். தமிழகம் முழுவதும் பரவலாக தனிநபர்களும், தன்னார்வ நிறுவனங்களும் இத்தகையவர்களை தேடி, தேடிச் சென்று உணவு அளித்து வருகின்றனர்.
திருச்சியில் அப்படி உணவின்றி தவிப்பவர்களை திருச்சி ராக்போர்ட் இன்ஸ்பயர் அரிமா சங்கத்தினர் உணவு அளித்து வருகின்றனர்.
திருச்சி ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம், அரிஸ்டோ ரவுண்டனா, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வீதிகளில் வசிப்பவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். அவர்களின் சேவையை பலரும் பாராட்டுகின்றனர். படம் நன்றி; தினமணி இணையதளம்
Comments