ஒரு ரூபாய்க்கு இட்லி, 10 ரூபாய்க்கு மதிய உணவு


இந்த கட்டுரைக்கு வைக்கப்பட்டிருக்கும் இப்படியான தலைப்பை படிக்கும்போதே பலர் நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்பதை புரிந்து கொள்வார்கள்.  நாம் இந்த கட்டுரையில் எழுத இருப்பது கோவை சாந்தி கியர்ஸ் மலிவு விலை உணவகம் குறித்துத்தான்.

பிஸ்எஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கியவர் சுப்பிரமணியம்.  கல்லூரி வேலைக்கு சென்ற நேரம் போக வீட்டில் லேத் பட்டறை வைத்து அதன் மூலம் தமது வாழ்க்கைக்குத் தேவையான பொருளை ஈட்டியவர். தாம் வாழ்க்கையில் உயர்ந்த பின்னர், தம்மை போன்று எளிய நிலையில் உள்ளவர்களை கருத்தில் கொண்டு சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அறக்கட்டளையை நிறுவி உதவிகளை செய்து வருகிறார். கோவை சிங்காநல்லூரில் மலிவு விலை உணவகத்தை அவர் தொடங்கினார். இட்லி ஒரு ருபாய், மதிய உணவு 18 ரூபாய் எனக்கொடுத்துக் கொண்டிருந்தார். ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டபோது மதிய உணவின் விலையை 10 ரூபாயாக குறைத்து விட்டார்.

இது தவிர முற்றிலும் பணம் இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கியும் வருகிறார். இதற்காக அவர் எந்த விளம்பரமும் செய்வதில்லை. இவரது சேவையை பிறர் மூலம் கேள்விப்பட்டு தாங்களாகவே இங்கு வந்து உதவி கேட்கின்றனர்.

உணவு மட்டுமின்றி, ஏழைகளுக்கான இலவச மருத்துவ சேவையையும் வழங்குகிறார்.குறைந்த கட்டணத்திலான மருத்துவ ஆய்வகங்கள், குறைந்த கட்டணத்தில் மருந்துகளையும் விற்பனை செய்து வருகிறது சாந்தி சோஷியல் சர்வீஸ் நிறுவனம். எந்த வகையிலும் விளம்பரம் தேடாத நல் இதயமான சாந்திகியர்ஸ் என்ற அடைமொழியுடன் அழைக்கபட்ட சுப்பிரமணியம் சமீபத்தில் அதாவது 11 ஆம் தேதி காலை உயிரிழந்தார். அவரது சேவையை குறித்து சமூக வலைதளங்களில் பலர் எடுத்துரைக்கின்றனர். இந்த தருணத்தில் அவரை நாமும் நினைவு கூர்கின்றோம்.

 


Comments


View More

Leave a Comments