சத்து நிறைந்த சைவ உணவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்


சைவமோ,அசைவமோ எதையும் அளவோடு உண்டால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரத சத்து உள்ள உணவுகளை உட்கொள்வதுதான் முக்கியம்  என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். புரத சத்துகள் பொதுவாக அசைவ உணவுகளில்தான் அதிகம் இருக்கின்றன. சிறுவர்கள், இளைஞர்கள் என ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் அசைவ உணவை எளிதில் செரிக்கும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம்.

ஆனால், மருத்துவர்களின் அறிவுரையின்படி முதியவர்கள் சைவ உணவுகளுக்கே முன்னுரிமை தருகின்றனர். அவரை மற்றும் பருப்பு வகைகளில் போதுமான அளவுக்கு புரதம் உள்ளன. புரத சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினால், அவர்கள் சோயா அவரையை சமைத்து சாப்பிடலாம். முளைகட்டிய தானியங்களும் புரத சத்துக் கொண்டவை என்பதால் அதையும் அவர்கள் சாப்பிடலாம். பச்சைப்பறு, கடலை ஆகியவற்றை முதல்நாளே தண்ணீரில் ஊற வைத்து, முளைகட்டியதும் சாப்பிட வேண்டும். முளைகட்டிய தானியங்களை தினமும் எடுத்துக் கொண்டால் உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும். பட்டாணியில் புரத சத்து மட்டுமின்றி வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. சோளத்தில் புரதசத்துடன் நார்சத்தும் இருக்கிறது. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது. உடலுக்குத் தேவையான அனைத்து வகையான சத்துகளும் கீரையில் இருக்கின்றன. நிலக்கடலை, காளான் ஆகியவற்றிலும் புரத சத்துகள் அதிக அளவு உள்ளன. இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.


Comments


View More

Leave a Comments