ஆரோக்கியமான சைவ உணவுகளுக்கு இதையெல்லாம் சாப்பிடுங்கள்...
நமது உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் பி, மற்றும் இ ஆகியவை அத்தியாவசியமாகத் தேவைப்படும் சத்துகளாகும். இது தவிர நார் சத்து, தாதுக்களும் நமது உடலுக்கு தேவையானவையாகும். சரி இவையெல்லாம் எந்த உணவில் இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். பழுப்பு அரிசி, ஓட்ஸ், பார்லி, சோளம், கம்பு, கோதுமை, கம்பு, திணை, கேழ்வரகு போன்றவற்றில் நாம் இங்கு குறிப்பிட்ட அனைத்து சத்துகளும் உள்ளன. இந்த முழு தானிய உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தானியங்களுடன் கொட்டை வகைகள் எனப்படும் நட்ஸ் உணவுகளையும் எடுத்துக் கொண்டால் இன்னும் கூடுதல் ஆரோக்கியமாக இருக்கலாம். குறிப்பாக பாதம், பிஸ்தா, முந்திரி, வேர்கடலை போன்ற கொட்டை வகை உணவுகளில் வைட்டமின் பி மற்றும் இ நிறைந்துள்ளன. தினமும் 20 கிராம் அளவுக்காவது கொட்டைகள் சாப்பிட வேண்டும் என்கின்றனர்.
முழு தானியங்கள், கொட்டைகள் மட்டுமின்றி காய்கறிகளும் நம் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசிய தேவையாகும். குறிப்பாக கீரை வகைகள் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பூச்ணிக்காய், பச்சைப் பட்டாணி போன்றவற்றில் வைட்டமின் ஏபிசி மற்றும் இ ஆகிய நான்கு சத்துகள் உள்ளன.
காய்கறிகளுடன் பழங்களும் நீங்கள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி சத்து உள்ளது. உயிரணுக்கள் சேதம் அடையாமல் பழங்கள் பாதுகாக்கின்றன. திசுக்களை சரி செய்யவும், எலும்பு, பற்கள் பராமரிப்புக்கும் பழங்கள் உதவுகின்றன. கொய்யா, அன்னாசி, மாம்பழம் போன்றவற்றிலும் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
இது தவிர உடல் இயங்கத்தேவையான புரோட்டீன்கள் பருப்பு வகைகளில் அதிகம் உள்ளன. துவரம் பருப்பு, உளுந்து, போன்ற பருப்பு வகைகளில் புரோட்டீனுடன் ஊட்டசத்துகளும் நிரம்பி இருக்கின்றன.
Comments