கோவையில் ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தமிழ்நாடு சிறுதானிய மாநாடு
உலகை வெல்லப் போகிறவர்களில் நீங்களும் ஒரு நபராக இருப்பதற்கு ஒரு அருமையான வாய்ப்பு நம்ம கோவையில்.காத்திருக்கிறது. கோடான கோடி மக்களுக்கு நல்லதொரு உணவு பழக்கத்தினை ஏற்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கை அமையும் என்ற புரிதலும், உண்மையும் இருப்பதாலே ஐநா சபை ( United Nations ) வருகின்ற 2023 ஆண்டை சர்வதேச சிறுதானிய வருடமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உங்களைப் போன்று சிறு மற்றும் நடுத்தர அளவில் சிறு தானியங்களில் மதிப்பு கூட்டல் செய்த பொருட்களை காட்சிப்படுத்தி (Stall) உள்ளூர் சந்தை முதல் உலகளாவிய சந்தை வரை கொண்டு செல்வதற்கு நம்ம கோவையில் வாழ்நாளிலும் கண்டிராத வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
Must Read: கல்யாண விருந்துபோல நூற்றுக்கணக்கானோர் சாப்பிடும் மன்னா மெஸ்
கோவையில் வருகின்ற ஜனவரி 07 & 08, 2023 தேதிகளில் டான்மில்லட் நிறுவனம், நிர்மலா கல்லூரி உடன் இணைந்து தமிழ்நாடு சிறுதானிய மாநாடு 2023 என்ற உலக சாதனை , கருத்தரங்குகள் , காட்சிப்படுத்தல் (Stall) போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையை வளப்படுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு இந்த காணொளியை பார்க்கவும். https://youtu.be/-R4LNgaMDZc
முன்பதிவுக்கு; +919367550555 என்ற மொபைல் எண்ணிலோ அல்லது [email protected]/[email protected] என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு; www.tanmillets.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
#Tanmillets #tanmillets #iyom2023

Comments
View More