செறிவூட்டப்பட்ட அரிசி தேவையா என்பதை சிந்தியுங்கள்…


இந்தியாவில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதால் செறிவூட்டப்பட்ட அரிசியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இது பழைய செய்தி என்றாலும் செறிவூட்டப்பட்ட அரிசியில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் சத்துகள் சேர்க்கப்படும் என்று கூறினார்கள். 

இதுகுறித்து அப்போதே சில மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கும்போது இது அனைவருக்கு அவசியமானதா? என்று கேள்வி எழுப்பினர். சில நேரங்களில் சிலருக்கு தேவைக்கு அதிகமான சத்துகள் உடலில் சேர்ந்தால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினர். எனவே, யார் யாருக்கெல்லாம் செறிவூட்டப்பட்ட அரிசி தேவை என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.

Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை

அயோடின் பற்றாக்குறையால் தைராய்டு உள்ளிட்ட நோய்கள் வந்ததாகக்கூறி கடல் உப்பு விற்க தடை விதித்ததுடன் அனைத்து உப்புகளிலும் அயோடின் சேர்த்து விற்று வருகிறார்கள். அயோடின் இல்லாத உப்பு விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றுகூட கோயம்பேடு வணிக சந்தையில் அயோடின் சேர்க்காத உப்பு விற்றதாகக்கூறி உப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இங்கேயும் அதே கேள்விதான்... யார் யாருக்கு அயோடின் உப்பு தேவை என்பதை முடிவு செய்யாமல் எல்லோரையும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பை சாப்பிடுங்கள் என்று வலியுறுத்துவது சரியானது அல்ல? என்று கூக்குரல் எழுப்பியும் அதைக் கண்டுகொள்வார் யாரும் இல்லை.

செறிவூட்ட பட்ட அரிசியால் நன்மை இல்லை   

ஆக, ஏற்கெனவே செய்த தவறை மீண்டும் அரிசி வழியாக செய்கின்றனர். இது கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும் ஒருவேளை இனிமேல் செறிவூட்டப்பட்ட அரிசிக்குத்தான் அனுமதி என்று சொன்னால் என்னாவது? நமது பாரம்பரிய அரிசிகளில் எல்லா சத்துகளும் நிறைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றவை. 

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் அரிசிகள் மற்றும் சிறுதானியங்களை நுகரும் பழக்கம் அதிகரித்துவரும் சூழலில் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி கட்டாயமாக்கப்பட்டால் என்னாகும்? 15 மாநிலங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் பரிசோதனை அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க மத்திய அரசு மும்முரம் காட்டியுள்ளது. இதுபற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

எம்.மரிய பெல்சின் (9551486617)

#EnrichedRiceInIndia #EnrichedRice   #EnrichedRiceBenefits  #NoNeedEnrichedRice
 

 


Comments


View More

Leave a Comments