எளிய ஆரோக்கியமான அதிக சத்துள்ள உணவு அவல்...
நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள் அவல். நார்ச்சத்து மிக்க அவல் வெள்ளை, சிவப்பு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. வெள்ளை அரிசியில் இருந்து தயாரிக்கப்படுவது வெள்ளை அவல். வெள்ளை அவலில் நமது உடலுக்குத் தேவையான ஊட்டசத்துகள் நிறைய உள்ளன. கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. எனவே உடல் எடையை குறைத்து உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு அவல் சிறந்த உணவாக இருக்கும். அவலில் வைட்டமின் பி சத்து நிறைய உள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் ஹோட்டல்கள் எல்லாம் மூடப்பட்டிருக்கும் நிலையில் என்ன சாப்பிடுவது என்ற குழப்பம் இல்லாமல் எளிய முறையில் மூன்று கைபிடி அவலை எடுத்து ஊறவைத்து, சில நிமிடங்கள் கழித்து அதில் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி தூளை சேர்த்து சாப்பிட்டலாம். நல்ல சுவையாக இருக்கும். தயாரிப்பதும் எளிது.
அதேபோல சிவப்பு அவலில் நிறைய சத்துகள் உள்ளன. அதாவது பட்டை தீட்டப்படாத சிவப்பு அரியில் தயாரிக்கப்படுவதால்தான் இந்த சிவப்பு அவலில் ஏராளமான சத்துகள் உள்ளன. அரிசியில் இருப்பது போலவே சிவப்பு அவலிலும் நார் சத்து அதிகம் இருக்கிறது. நார் சத்து மட்டுமின்றி கால்சியம், இரும்பு சத்து உள்ளிட்ட சத்துகளும் உள்ளன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை சாப்பிடலாம். பசியைத் தாங்கக் கூடியது. உடலை கெட்டிப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
Comments