
நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவுகள் வேண்டாமே!
50 வயதுக்கு மேலும் பலர் ஆரோக்கியமாக இருப்பார்கள். காரணம் அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவார்களாக இருப்பதுதான். ஆனால், இன்றைக்கு இளம் வயதிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுவதற்கு தவறான உணவுப் பழக்கங்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன.
மதுபானங்கள்; குறிப்பாக மது அருந்துவது நமது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. அதிக மது அருந்துவதால் நிமோனியா, சுவாச நோய்க்கு நீங்கள் ஆட்பட நேரிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் தொற்று நோய் உங்கள் உடலில் எளிதாக தாக்கும். உங்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் அறுவை சிகிச்சை செய்திருந்தால், மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதில் இருந்து குணம் ஆவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். மதுவுக்குப் பதிலாக இயற்கை பழசாறுகளை பருகலாம். கிரீன் டீ போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
உப்பு; உணவில் சேர்க்கப்படும் அதிகப்படியான உப்பு உடலில் அதிக நீர் தேங்க வழிவகுக்கும். உடலில் அதிக ரத்த அழுத்தம் ஏற்படும். அதிக ரத்த அழுத்தமானது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். எனவே உணவில் உப்பை குறைத்துக் கொள்வது நல்லது. சிப்ஸ் முதலியவறில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் உப்பு அதகமாக இருப்பதால்அதனையும் தவிர்க்கலாம்.
சர்க்கரை; பல்வேறு ஆய்வுகளின் படி சர்க்கரை கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனை குறைக்கிறது. அளவோடு சர்க்கரை எடுத்துக் கொண்டால் மட்டுமே பல உடல் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிரப்பது நல்லது.
Comments