கேன்சரை எதிர்க்கும் உணவுப்பொருட்கள்


இன்று கேன்சர் மருத்துவமனைகள்ல் கூட்டம் குவிவதற்குக் காரணமே நம் உணவு வழக்கங்களில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம்தான். நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே கேன்சரை எதிர்க்கும் சத்துகள் உள்ளன. இயற்கை மருத்துவர் தீபா சரவணன் குறிப்பிடும் இந்த உணவுப் பொருட்களை கேன்சர் நோயாளிகள் மட்டும் அல்ல யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். 

* வேலையை எளிதாக்குவதற்கும் ஆடம்பரத்துக்கும், நாம் கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்குவதை விடுங்கள்.
* முக்கியமாக மசலாப் பவுடர்களை வீட்டிலேயே அரைத்துக் கொள்வதாக இருக்கட்டும்
*. ரீஃபைண்ட் ஆயில், ரீஃபைண்ட் சர்க்கரை, ரீஃபைண்ட் உப்பு போன்றவை வேண்டவே வேண்டாம்.
#பூண்டு கேன்சரை வரவிடாமல் தடுப்பதிலும் வந்தவர்களுக்கு அதை விரைந்து குணப்படுத்துவதிலும் முக்கிய பங்குடையது. தினமும் 4 பூண்டு பற்களை மென்று தின்றால் போதும், பூண்டில் உள்ள அலிஸின் என்ற ஆன்டி ஆக்ஸிடெண்ட், உடலில் தங்கி கேன்சரை உருவாக்கும் ஃப்ரிரேடிகல் என்ற தீங்கான செல்களை வெளியேற்ற உதவும் நியூட்ரிசின்களை உடலில் அதிகரிக்கிறது. உடலை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாற்றுகிறது. பூண்டை வேகவைத்து சாப்பிடும்போது, அதிலுள்ள ”அலிசின்” சிதைவதால், பூண்டை பச்சையாக சாப்பிடுவதே முழுபலன் அளிக்கும்.
#பசலைகீரை கேன்சருக்கு மருந்து. பசலைகீரை சாப்பிட்டால் உடலில் தங்கியுள்ள நச்சுத்தன்மையான ஃப்ரீரேடிகல் செல்களை வெளியேற்றுகின்றன.
#கேரட் கேரட்டில் அதிகமுள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடெண்ட், கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துவதோடு, அது நமது உடல் செல்களை அழிப்பதையும் தடுக்கிறது.
#பசலைக்கீரையையும்_கேரட்டையும் தனிதனியாக ஜூஸ் செய்து, பின்னர், ஒன்றாக கலந்து அதில் ஏலக்காய், தேன் கலந்து சாப்பிடுவது கேன்சருக்கு மிகச்சிறந்த ட்ரீட்மெண்டாக அமையும். வராமலும் தடுக்கலாம். இதை கர்ப்பிணிகளுக்கு கொடுத்தால் தாயும் குழந்தையும் மிக ஆரோக்கியமாக இருப்பார்கள். இதுதவிர, நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களையும் குணப்படுத்த வல்லது.
#தக்காளி யின் சிவப்பு நிறத்துக்கு அதில் உள்ள லிகோபின் என்ற ஆன்டி ஆக்ஸிடெண்டே காரணம். இது கேன்சர் செல்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. உடல் செல்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி, இன்ஃபெக்‌ஷன் மற்றும் கேன்சரை ஏற்படுத்தும் இன்ஃப்ளமேஷன் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. குறிப்பாக, பெண்களின் ப்ரெஸ்ட் கேன்சர், மற்றும் குடல் சம்பந்தமான கேன்சரையும் ஆண்களின் ப்ராஸ்டேட் கேன்சரையும் குணப்படுத்த வல்லது.தக்காளியை அதிகம் வேகவைத்தால் அதில் உள்ள லிகோபின் சிதைந்துவிடும் என்பதால், பச்சையாகவோ, ஆஃப் பாயிலாகவோ சாப்பிடலாம்.
#ஸ்ட்ராபெர்ரி யில் அந்த்ரோசயனின் என்ற ஆன்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இது கேன்சரை உருவாக்கும் இன்ஃப்ளமேஷன் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. குறிப்பாக, ஜீரணமண்டலத்தில் ஏற்படும் கேன்சரை தடுக்கிறது. ஞாபகசக்தியை அதிகரிப்பதிலும் இதற்கு பங்கு உண்டு.
இதை தனியாகவும் சாப்பிடலாம், தேங்காய்பால், ஏலக்காய், தேன், உலர்ந்த திராட்சை ஆகியவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
#ப்ரகோலி இதிலுள்ள க்ளுகோரபனைன் & இண்டோல்_3-_கார்பினால் என்ற ஆன்டி ஆக்ஸிடெண்ட் வயிறு, மார்பு, கர்ப்பப்பை ஆகிய உறுப்புகளில் உருவாகும் புற்றுநோய் செல்களை வெளியேற்றுகிறது. ப்ரகோலியை அதிகம் வெப்பப்படுத்தக் கூடாது. ப்ரகோலியோடு, தேங்காய், தக்காளி, மிளகுதூள், உப்பு சேர்த்து சாப்பிட்டால் நல்ல பயனளிக்கும்.
#இஞ்சி : கார்போஹைட்ரேட், சுகர் இருப்பவர்களுக்கு கேன்சர் விரைவில் பரவுகிறது. கேன்சரை உருவாக்கும் கார்சினோஜெனிக் ஏஜெண்டை, குறைக்கும் சக்தி கொண்டது இஞ்சி. இதற்கு சுகர், மற்றும் கார்போஹைட்ரேட்டை குறைக்கும் ஆற்றலும் உண்டு. இதனால், இஞ்சிக்கு ”ஆன்டி இன்ஃப்ளமேடரி ஏஜெண்ட்’ என்று பெயர்.
இஞ்சியில், ஜிஞ்ஜெரால்ஸ் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் இருப்பதால், லுகிமியா என்ற ரத்த புற்றுநோயை குறைக்கிறது. மேலும், ஆண்களின் புராஸ்டேட் கேன்சரையும் பெண்களின் ப்ரெஸ்ட் கேன்சரையும் எதிர்க்கிறது. இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால்ஸ் சத்து, சமையல் வெப்பத்தால் பாதிக்கப்படுவதில்லை. அதனால், இஞ்சியை சமையலில் சேர்த்தும் அல்லது பச்சையாக சாறு எடுத்தும் பருகலாம்.
இஞ்சியோடு, மிளகு, திப்பிலி, வெற்றிலை சேர்த்து எடுத்துக்கொள்வது நல்ல பலன் தரும்.
#விதைகள் : பொதுவாகவே, விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் செயல்பட காரணம். அவற்றில் விட்டமின் இ, மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் இருப்பதுதான். இவை ஜீரண மண்டலத்தை வலுப்படுத்துகின்றன..
சன்பிளவர் விதை
இதில், துத்தநாகம் (ஸிங்க்), அதிகமாக உள்ளது. அதோடு, விட்டமின் சி, விட்டமின் இ செறிவாக இருப்பதால், உடலில் ஏற்படும் காயங்கள் ஆறவும் கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்கவும் பயன்படுகிறது.
#பூசணி_விதை
இதில் நார்ச்சத்தும் விட்டமின் ”இ’ யும் செறிவாக உள்ளது. அதனால், கேன்சர் செல்களை அழிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து பாதுகாக்கிறது. பூசணி விதைகளை ஊறவைத்து, பின்னர் அதை அரைத்தால் மாவுப்பொருள் கிடைக்கும். அதில், திராட்சை, முந்திரி, பாதாம், பேரீச்சம்பழம், தேங்காய், வெல்லம் கலந்து சாப்பிடலாம். சுவையாகவும் சக்தியாகவும் இருக்கும்.
#எள்_விதை
எள்ளில் ”லிக்னன்” என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இது கேன்சர் செல்களாக உருவெடுக்கும் இன்ஃப்ளமேஷன் செல்களை அகற்றுகிறது. மேலும், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. எள்ளை நேரடியாகவும் சமையலில் எண்ணெயாகவும் சேர்க்கலாம். தவிர, எள்ளை ஆலிவ் விதையுடன் சேர்த்து அரைத்து, அதை சோம்புடன் கலந்து சாப்பிட்டால், அதில் உள்ள லிக்னன், ஈஸ்ட்ரோஜென் மற்றும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயை குறைக்கிறது.
#நட்ஸ்
கேன்சர் வருவதற்கு விட்டமின்_பி17 குறைவதும் ஒரு காரணம் என ஆய்வுகள் கூறுகிறது. அதனால், விட்டமின்_பி 17 ”ஆன்டி கேன்சர் விட்டமின்’ என்றே அழைக்கப்படுகிறது. பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நெட், உலர்ந்த திராட்சையில் விட்டமின்_பி17 அதிகம்! விட்டமின்_பி17 அதிகமாக உள்ள உணவை, ”நைட்ரிலோஸைட்ஸ்’ என்று அழைப்பார்கள். இவற்றில் அரிதான செலினியம் சத்தும் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் ஆண்டி கேன்சர் ஏஜெண்டாக செயல்படுகிறது.
பிஸ்தாவில் குறிப்பாக, காப்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம், செலினியம் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதோடு புரோட்டினும் அதிகம் உள்ளதால், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்சை குறைக்கிறது.
சோயா, பட்டாணி போன்ற பருப்புகள், ஈஸ்ட்ரோஜன் கேன்சரை கட்டுப்படுத்துகிறது.
#குடும்பத்தில்_யாருக்காவது_கேன்சர்_இருந்து மரபு வழி மூலம் ஒருவருக்கு கேன்சர் வருவதற்கான வாய்ப்பு இருந்தால், அதைத் தடுக்கும் சக்தி சில சத்துக்களுக்கு உண்டு. பீன்ஸ், கேரட், பூசணி, கீரை நான்கையும் சேர்த்தால் அதில் போலிக் ஆஸிட் கிடைக்கிறது. இந்த போலிக் ஆஸிட்டோடு, நியாசின், விட்டமின்_பி12, பயோடின், கோலைன் இந்த சத்துக்களும் சேர்ந்து, எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி ஜெனிடிக் மூலம் கேன்சர் வரவிடாமல் தடுக்கிறது.
அதுபோல, ஜெனிடிக்காக வரும் கேன்சரை தடுக்கும் இன்னொரு விஷயம், பச்சைக் காய்கறிகளோடு, முளைக்கட்டிய பயறுகளை சேர்த்துச் சாப்பிடுவது!.
#பயிற்சிகளால்_தடுக்கலாம்
கேன்சரை தடுப்பதற்கும், வந்தால் குறைக்கவும் சிலவகை பயிற்சிகள் உண்டு. கிரியை யோகம் மூலம் ஃபிரிரேடிகல் கழிவுளை வெளியேற்ற முடியும். அதுபோல, நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், சூரிய குளியல், நிற சிகிச்சை, காந்தக தண்ணீர் குடித்தல், உபவாசம் போன்ற முறைகளில் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தலாம்.

 


Comments


View More

Leave a Comments