மாம்பழம் சாப்பிடுவதால் உடல் குண்டாகுமா?
பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களை உண்ண வேண்டும் என்று எப்போதுமே நமக்கு அறிவுறுத்தப்படுவதுண்டு. அப்படித்தான் கோடை காலத்தில் மாம்பழங்களை நாம் உண்ணுவது வழக்கம். கோடை வெயிலில் தினமும் மாம்பழம் சாப்பிடுவதை நம்மால் தவிர்க்க முடியாது. பழங்களின் அரசனான மாம்பழத்தை உண்பதால் உடல் குண்டாகி விடும் என்றும் சிலர் சொல்கின்றனர். இது உண்மையா, பொய்யா என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
உடல் நலத்தைப் பேணும் பலர் மாம்பழத்தை கொஞ்சம் தள்ளியே வைக்கின்றனர். ஒவ்வொரு நாளும் மாம்பழத்தை உண்ணுவதால் கணிசமாக உடல் எடை அதிகரிக்கும் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால், நுண்ணூட்ட சத்து வல்லுநர்கள் கொழுப்புகள் அற்ற, உப்பு தன்மையற்ற மாம்பழத்தை கோடைகாலத்தில் உண்ணுவது மிகவும் நன்மை பயக்கும் என்று சொல்கின்றனர். அதே நேரத்தில் அதிகமாக உண்ணுதல் என்பது எந்த உணவுமே உடலுக்கு கேடு விளைவிப்பதுதான். மாம்பழமும் அப்படித்தான் அளவுக்கு மீறி அதனை உண்ணக்கூடாது. ஒவ்வொரு முறை உணவு உண்ணும்போது மாம்பழம் உண்பது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உணவு உண்ட உடன் மாம்பழம் சாப்பிடக் கூடாது. முற்பகல் அல்லது பிற்பகலில் சினாக்ஸ் போல மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
சில வல்லுநர்கள் மாம்பழம் உண்பது உடல் எடையை குறைக்கும் என்று சொல்கின்றனர். குறிப்பிட்ட கலோரி அளவுக்கு மாம்பழம் சாப்பிட்டால், உடல் எட்டையை தக்க வைக்க முடியும். மாம்பழத்தில் உள்ள இனிப்பானது, உங்களையும், உங்கள் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பருவகாலத்தில் கிடைக்கும் மாம்பழத்தை உண்ணும்முன்பு உங்கள் கலோரி அளவை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உண்ணுங்கள்.
மாம்பழ பழ கலவை
மாம்பழத்தை துண்டு, துண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய வெங்காயம், ஒரு தக்காளி, கொஞ்சம் உப்பு, கருப்பு மிளகுதூள், எலுமிச்சை ஜூஸ், நறுக்கிய மல்லித்தழை ஆகியவற்றை ஒரு சிறு கிண்ணத்தில் போட்டு கலக்கி மாம்பழ பழகலவையை சாப்பிடுவது இன்னும் கூடுதல் உற்சாகத்தைத் தரும்.
மாங்காய் ஜூஸ்
இரண்டு மாங்காய்களை வேக வைக்கவும். பின்னர் அவற்றை தோல் உரித்து விட்டு தனியே வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் இரண்டு டீ ஸ்பூன் சர்க்கரை, சுவைக்காக உப்பு, 2 டீ ஸ்பூன் சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகுதூள், ஒரு டீஸ்பூன் கறுப்பு உப்பு, 2 டீஸ்பூன் சாட் மசாலா, புதினா இலை, ஆகியவற்றுடன், தோல் உரித்த மாங்காயை போட்டு நன்றாக பசை போல அரைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கிளாசில் பாதியளவு தண்ணீர், பாதியளவு மாங்காய் கலவையை சேர்த்து குடிக்கலாம். இது அற்புதமான பானமாக இருக்கும்.
பா.கனீஸ்வரி
#MangoSeason #Mango #HealthyBenefitsOfMango #NutrientsOfMango #AamPanna
Comments