அம்மா உணவகங்களின் அரும்பணி


 

மலிவு விலை உணவகங்கள் என்ற  பெயரில் சென்னை மாநகராட்சியால் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அம்மா உணவகங்கள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இன்றைக்கு சென்னை மாநகராட்சி முழுவதும் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் உள்ளன.

அம்மா உணவகங்கள் ஆரம்ப கட்டத்தில் சுவையான உணவுகளை வழங்கி வந்தன. அதிக நிதியும் ஒதுக்கப்பட்டது. பின்னர் எல்லா மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. அம்மா உணவகங்கள் செயலைப் பார்த்து அப்போது ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் இது போன்ற ஒரு திட்டத்தைத் தொடங்கினார்.

இப்படி புகழ்பெற்று விளங்கிய அம்மா உணவகங்களில் நாளைடவில் சுவையின் தரம் குறைந்து விட்டதாக புகார் எழுந்தது. அம்மா உணவகங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்றெல்லாம் புகார்கள் வந்தன. குறிப்பாக ஜெயல லிதா மரணத்துக்குப்பின்னர் பல அம்மா உணவகங்கள் செயல் இழந்தன. நிதிப்பற்றாக்குறை என்று கூறப்பட்டது. 

எனினும் பல இடங்களில் தட்டுத்தடுமாறி நடைபெற்று வந்த அம்மா உணவகங்கள் எளியவர்களின் புகழிடமாக இருந்து வந்தன. குறைந்த வருவாய் உள்ள எளியவர்கள் அம்மா உணவகங்களில்தான் தங்கள் பசியை போக்கிக் கொண்டனர்.

இப்போது கொரோனோ வைரஸ் தாக்கம் ஏழை, எளியோர், வீடு, குடும்பம் அற்றோர், அனாதைகள் ஆகியோருக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் சார்பில் இயங்கும் அம்மா உணவகங்களில் மே மாதம் 3-ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும், அதற்கான செலவுகளை அ.தி.மு.க ஏற்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஏழை எளியவர்களின் பசியறிந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதை பலரும் வரவேற்கின்றனர். தொடர்ந்து அம்மா உணவகங்கள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.  ஏழ்மையும், பசியும் இருக்கும் வரை அம்மா உணவகங்கள் இருக்க வேண்டும். தொடர்ந்து அம்மா உணவகங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

 


Comments


View More

Leave a Comments