உணவு டெலிவரி மொபைல் செயலிகளின் உன்னதப்பணி


எதிலும் அவசரம், எங்கும் அவசரம், மின்னல் வேகம் என்று இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு உணவு உண்ணுவதற்கு கூட நேரம் இல்லை. அப்புறம் எப்படி சமைப்பதற்கு நேரம் இருக்கும். சமைக்கக்கூட வேண்டாம் ஒரு உணவகத்துக்கு சென்று சாப்பிடுவதற்கு கூட நமக்கு நேரம் இல்லை.

வீட்டில் இருந்தபடியே உணவு விநியோக செயலிகளில் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து, வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து விட்டது.

குறிப்பாக இந்த ஊரடங்கு காலகட்டத்தில் வெளியே நடமாடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் காரணமாக உணவு செயலிகளின் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது அபார வளர்ச்சி பெற்றிருக்கிறது. 

இந்தியாவில் உணவு வகைகளை, உணவுப்பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து தரும் உணவு செயலிகள் என்னென்ன இருக்கின்றன என்று இப்போது பார்க்கலாம்.

ஜொமாட்டோ

இந்த உணவு செயலி கடந்த 2008-ம் ஆண்டில் ஃபுட்டிஈபே என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர் இது ஜொமாட்டோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி 25 நாடுகளில் உணவு டெலிவரி பணியை மேற்கொள்கிறது. உங்கள் வீட்டுக்கு அருகில் அல்லது உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ரெஸ்டாரெண்ட் மற்றும் உணவகங்களை செயலில் துல்லியமாக காட்டுகிறது. உணவகங்களின் மெனுக்கள், விலை விவரங்கள், எவ்வளவு நேரத்தில் டெலிவரி செய்யப்படும் என்பது போன்ற விவரங்களுடன் இந்த நிறுவனம் உணவு டெலிவரியில் முன்னணியில் இருக்கிறது.

சுப்பில் (Shupple)

சுப்பில் என்ற அத்திவாசிய பொருட்கள் மற்றும் உணவுகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஆஃப் இப்போது பிரபலம் ஆகி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த செயலி செயல்படுகிறது. 85 ஆயிரம் உணவுப் பொருட்கள், 4000-த்துக்கும் மேற்பட்ட முன்னணி பிராண்ட்களை இந்த மொபைல் செயலியின் மூலம் ஆர்டர் செய்யலாம்.

கொரோனா கால ஊரடங்கு காலகட்டத்தில் தத்தளிக்கும் சிறு நிறுவனங்களுக்கு இந்த மொபைல் செயலி ஆதரவு கரம் நீட்டுகிறது. சிறிய நிறுவனங்களின் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பதில் இந்த மொபைல் செயலி அக்கறை காட்டுகிறது. விரைவான டெலிவரி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொடர்புகள் அற்ற விநியோகம் ஆகியவற்றிலும் இந்த மொபைல் செயலி கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்விக்கி

இந்தியாவில் மிகவும் பிரபலம் ஆக உள்ள உணவு டெலிவரி மொபைல் செயலி ஸ்விக்கி. உணவு வகைகள் டெலிவரி நிலையை கூகுள் வரைபடம் மூலம் அப்டேட் செய்வது வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. உணவுப் பொருட்களை தள்ளுப்படி விலையிலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. உணவுக்கான பணத்தை பல்வேறு வழிமுறைகளில் செலுத்தும் வசதிகளையும் இந்த செயலி அறிமுகம் செய்துள்ளது.

ஃபுட்பாண்டா

இந்த உணவு டெலிவரி மொபைல் செயலியானது கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். நாற்பது நாடுகளில் இந்த உணவு செயலில் செயல்படுகிறது. ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் இருந்து செயல்படும் இந்த உணவு செயலி இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் உணவு டெலிவரி சேவையை வழங்குகிறது.

துண்ஜோ

இந்த உணவு செயலி உணவு வகைகளை மட்டுமின்றி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருந்துகளையும் வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்கு டெலிவரி செய்கிறது. நகரின் எந்த பகுதியில் இருந்தும்,எந்த ஒரு உணவுப் பொருட்களையும் ஆர்டர் செய்யும் வசதி இந்த செயலியில் உள்ளது. தூரம் ஒரு பொருட்டாக கருதாமல் இந்த செயலி சேவையாற்றுகிறது.

 

 


Comments


View More

Leave a Comments