பத்து ரூபாய்க்கு சட்னி, 40 ரூபாய்க்கு சாம்பார்,ரூ.110-க்கு நாலு பீசுடன் நாட்டுக்கோழி குழம்பு


வெறும் சாப்பாடு மட்டும் வைத்துக் கொண்டு சட்னியோ அல்லது சாம்பார் அல்லது குழம்பு வகைகளை ஹோட்டலில் வாங்கி சமாளித்துக் கொள்ளும் பேச்சிலர்கள் ஏராளம் உண்டு. இப்போது பேச்சிலர்கள் மட்டும் அல்ல. ஒருகுடும்பத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போகின்றவர்களாக இருந்தால், குழந்தைகளுக்கு, குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு என்று தனித்தனியாக விதம்,விதமாக சமைப்பது என்பது முடியாத காரியம்.

வெறும் சோறு மட்டும் வடித்துக் கொண்டால் காய்கறி, குழம்பு வகைகளை கடையில் வாங்கிக்கொள்ளலாம் என்ற பழக்கம் அதிகரித்துள்ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்கிறது இப்போது வடபழனியில் உள்ள அம்மா செய் கறி பாயிண்ட் எனும் சட்னி, சாம்பார், குழம்பு வகைகள் விற்கும் கடை தொடங்கப்பட்டுள்ளது.

வடபழனியை சுற்றி சினிமா துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் பணியாற்றுகின்றனர். அவர்கள் இந்த கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டமான சூழல்களை சந்தித்தனர். அவர்களின் பசியாற குறைந்த விலையில் இந்த சைட்டிஷ் விற்கும் கடையை இவர்கள் தொடங்கினர்.

வீட்டிலேயே தாய் மற்றும் வீட்டில் உள்ள பெண்கள் சமைத்துக் கொடுக்க மகன்கள் குழம்பு கடையை நடத்தி வருகின்றனர். தா அற்புதமான சமையல் கலையால் சட்னி முதல் சாம்பார் வரை, நாட்டுக்கோழி குழம்பு முதல் இறால் தொக்கு வரை ருசியாக சமைத்து, தரமான உணவு வகைகளை குறைந்த விலையில் விற்கின்றனர்.

அம்மா செய் கறிபாயிண்ட் உணவகத்தின் உரிமையாளர் பிரகாஷிடம் பேசினோம். நான்கு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தின் கூடுதல் வருவாயை கருத்தில் கொண்டு இந்த உணவகத்தைத் தொடங்கினோம். எங்களிடம் குறைந்த பட்சம் பத்து ரூபாய்க்கு சட்னி கிடைக்கிறது. ரசம் இருபது ரூபாய்க்கு தருகின்றோம். சாம்பார் 40 ரூபாய்க்குத் தருகின்றோம். நாட்டுக்கோழி குழம்பு 110 ரூபாய்க்குத் தருகின்றோம். மட்டன் குழம்பு, இறால் தொக்கு உட்பட அனைத்து வகையான சைவ, அசைவ சைட்டிஷ்களை தரமாக சுவையாக சமைத்து தருகின்றோம். தினந்தோறும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வடபழனியில் செயல்பட்டு வரும் நாங்கள் இப்போது அண்ணா நகரிலும் கடை திறந்துள்ளோம். அங்கு விளம்பரம் இல்லாமலேயே எங்கள் உணவு வகைகளின் ருசி மற்றும் தரத்தின் காரணமாக வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர்.  தொடர்ந்து ருசியோடும், தரமாகவும், குறைந்த விலையிலும் விற்பனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்”என்றார்.

வடபழனியில் செயல்படும் உணவகத்தின் முகவரி அம்மா செய் கறி பாயிண்ட், 65/17 கங்கையம்மன் கோவில் தெரு, வடபழனி, சென்னை-26

மொபைல் எண்;9962888861

 

#ChutneyForTenRupees  #SambarFor40Rupees  #CountryChickenWith4PieceRS110

 

 


Comments


View More

Leave a Comments