இளநரையைப் போக்கும் உணவு முறை


இளநரையைப் போக்கும் உணவு முறை 
உடலின் வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமுதாயத்தில் இளம் வயதில் நரை ஏற்படுவது  பல்வேறு மன உளைச்சல்களையும், மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. 
இளநரை வருவதற்கு நமது உணவு பழக்க வழக்க மாற்றங்கள், விரைவான உலகின் விரைவான செயல்பாடுகள் ஆகியவற்றின் விளைவாக நமது உண்ணும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் காரணம். 
அன்றாடம் நாம் உண்ணும் உணவில் கறிவேப்பில்லை என்பது இருக்கத்தான் செய்கிறது. அதனை ஒதுக்கி வைத்து விட்டு கீழே போட்டு விட்டு சக்கையான உணவை நாம் சாப்பிடுகின்றோம். ஆனால், இனி கறிவேப்பில்லையை ஒதுக்காமல், கீழே போடாமல் சாப்பிட வேண்டும். இளநரையைத் தடுப்பதில் கறிவேப்பில்லைக்கு முக்கிய பங்கு உண்டு. கறிவேப்பில்லை பொடியை சாத த்தில் கலந்து சாப்பிட்டாலும் இளநரையை தடுக்க முடியும். 
உலர்ந்த நெல்லிக்காயை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும், தேங்காய் எண்ணையில் கறிவேப்பில்லையை கலந்து அரைத்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் இளநரை மறையும். 
உணவில் முளைக்கீரையை அதிகம் சேர்த்துக் கொண்டாலும் இளநரை பாதிப்பு குறையும். செம்பருத்தியின் இலை மற்றும் பூ ஆகியவற்றை அரைது அதனை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தாலும் இளநரை மறையும். 


Comments


View More

Leave a Comments