பசித்தபின்னர் சாப்பிட்டால் ஆரோக்கியம்...


உணவு என்பது உடல் ஆரோக்கியத்துக்கானது. பசித்தபோது உணவு உண்ண வேண்டும் என்றுதான் நம் முன்னோர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமாக உடல் நலத்தை நாம் பேண வேண்டும் எனில் ஊட்டசத்துள்ள உணவுகளை நாம் அவசியம் உண்ண வேண்டும். 
தினமும் ஒரே வகையான உணவுகளை சாப்பிடக் கூடாது. உணவுடன் காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன், கோழி போன்ற உணவுகள், தானிய வகை உணவுகள் என்று கலவையாக சாப்பிட வேண்டும். அடுத்தடுத்து ஒவ்வொரு உணவாக இவற்றை சாப்பிடலாம். 
மிதமான அளவில் சரியான உணவை சாப்பிடும்போதுதான் உரிய நேரத்தில் உங்களுக்கு பசிக்கும். பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்று பிரித்துப் பார்க்காமல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவு எது என்ற அளவீட்டை வைத்துக் கொள்வது நல்லது. 
நொறுக்குத் தீனிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சத்தான நொறுக்குத்தீனிகளை திண்ணலாம். மற்றவற்றை தவிர்த்து விட வேண்டும். கொழுப்பு, உப்பு போன்றவை சம மாக உள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். 


Comments


View More

Leave a Comments