வாயு தொல்லை நீங்க இதைச் சாப்பிடுங்கள்
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, இன்றைய சூழலில், அவசர உணவு கால யுகத்தில் சிறுவர்களுக்குக் கூட வாயு கோளாறு ஏற்படுகிறது. வாயுகோளாறு சரிசெய்யப்படாவிட்டால், அது பல நோய்களுக்கு தொடக்கமாக அமைந்துவிடும். வாயுகோளாறு இருப்பவர்கள் இந்த மருந்தை செய்து சாப்பிட்டுப் பார்க்கலாம்.
அகத்திப்பூவுடன் மஞ்சள், பூண்டு, பாசிப்பருப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அதன்பிறகு நல்லெண்ணெயில் இஞ்சி, பூண்டு சேர்த்து தாளித்து வேக வைத்த அகத்திப்பூ கலவையைக் கொட்டி கூட்டு போல் செய்ய வேண்டும்.
இதை பகல் உணவுடன் சேர்த்து தொடர்ந்து 20 நாள்கள் சாப்பிட்டால் வாய்வுத்தொல்லையால் ஏற்படும் இதய வலி ஏற்படுவதைத் தடுக்கும். அதுமட்டுமல்ல ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை நீக்க உதவும். பீடி, சிகரெட் பிடிப்பவர்கள் அகத்திப்பூவை இதன்படி சமைத்துச் சாப்பிட்டால் பிரச்சினை ஏதும் வராது. எளிய பொருளில் எத்தனை மகத்துவமிக்க மருத்துவம்.
Comments