துரித உணவு, ஆரோக்கியமற்ற உணவு உண்ணுவோரிடையே அதிகரிக்கும் கொரோனா தொற்று


கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 24ம் தேதி வரை பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இணை நோய் இல்லாத இளைஞர்களுக்கு அதிகம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் ஆரம்பத்திலேயே நோய் தொற்றின் அறிகுறியை அறியாமல் அலட்சியமாக இருந்ததால், நோய் முற்றி உயிரிழக்க நேரிட்டிருப்பதாகவும் கூறினார். 

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதங்களை பார்க்கும்போது 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், 45 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கொரோனாவால் உயிரிழப்பது அதிகரித்திருக்கிறது. இதற்கு மருத்துவர்கள் கூறும் காரணத்தை புறம் தள்ளி விட முடியாது. 

இளைஞர்களின் வாழ்க்கை சூழல் காரணமாக அவர்கள் கொரோனா தொற்றுக்கு பலியாவது அதிகரித்திருக்கிறது. வேலை, படிப்பு என்று அக்கறை காட்டும் இளைய தலைமுறை தங்கள் உடல்நலனை காப்பதில் அக்கறை காட்டுவதில்லை.

அவசரத்தில் இருக்கிறேன், வேலையில் இருக்கிறேன் என்ற பெயரில்  துரித உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுவதில் இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். முறையான உணவு சாப்பிடுவதில் பெரும்பாலானோர் அக்கறை காட்டுவதில்லை. இதுதான் இளைஞர்களிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பதம் பார்க்கிறது. ஆம் இளைஞர்களின் உணவு பழக்கம் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்பதுதான் உண்மை.
 

 

இதன் காரணமாக இளைஞர்கள் கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக உயிரிழக்க நேரிடுகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய இயற்கை மருத்துவர் தீபா சரவணன்(Associate professor and medical officer at Govt. Yoga & Naturopathy Medical College, (GYNMC) Chennai), “ ஆரோக்கியமற்ற உணவானது நமது உடலின் எதிர்ப்பு சக்தியை பெருமளவு பாதிக்கிறது. நமது உடலின் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது  வைரஸ் கிருமி எப்படி நம்மை தொற்றுகிறதோ அதே போல நோய் எதிர்ப்பு குறைவாக இருக்கும் போது தான் இந்த துரித உணவும் நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

 

கொரோனா இரண்டாவது அலையில் பன்மடங்கு கொரோனா பாதிப்பு  அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன என்று பார்த்தால்  நாம் உணவு உண்ணும் முறை மற்றும் நமது ஆரோக்கியமற்ற விஷயங்கள்தான் என்பது தெரியவரும். நமது உடல் ஆரோக்கியத்துக்கும் ஆரோக்கிய மற்ற உணவு முறை மற்றும் துரித உணவுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. ஜங்க் புட் எனப்படும் ஆரோக்கியமற்ற உணவுகள் நமக்கு ஒரு சதவிகிதம் கூட நன்மை அளிக்காது. 

 

ஆரோக்கியமற்ற உணவுகளால் உடல் பருமன் ஏற்படும். உடல் ஆரோக்கியம் குன்றும். இந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் மொத்த உலக நாடுகளும், பல ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் நம்மிடம் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். 

ஜங்க் ஃபுட்  உண்பதன் வாயிலாக எப்படி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைக்கிறது. ஜெர்மனியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் போன்(university of bonn). மேற்கொண்ட ஆராய்ச்சியில்  ஜங்க் புட் உணவுகள்  உணவில் அதிகமான கொழுப்பு, அதிகமான சர்க்கரையை கொண்டிருக்கின்றன என்றும், நார் சத்து குறைவாக இருக்கின்றன என்றும் கூறுகிறது. இத்தகைய ஜங்க் ஃபுட் உண்ணும் போது  நமது உடலில் அலர்ஜி மாற்றங்கள் ஏற்படுகின்றது. 

அலர்ஜி மாற்றமானது வைரஸ் கிருமியால் எளிதாக பாதிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை  பாதிக்கிறது. ஆரோக்கியமற்ற உணவை நாம் உண்ணும் போது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களில் பன்மடங்கு பாதிப்பு ஏற்படுகிறது. ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.  நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மருந்துகள் எடுத்துக் கொள்வது போன்றவற்றை மேற்கொண்டாலும் கூட  நாம் அதிகமான அளவு த துரித உணவு எடுத்துக் கொள்வதால் பாதிக்கப்பட்ட இயற்கையான எதிர்ப்பு சக்தியை முற்றிலும் மீட்க முடியாது. 

நம் உடலில் நோய் எதிர்ப்பு குறைவதையும் நம் உடல் முன்பே எச்சரிக்கை செய்கிறது.  தலைவலி. உடல் வெப்பம் அடைதல் ஆகியவை நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் தாக்கங்களாகும். நோய் எதிர்ப்பு சக்தி எப்படி பாதிக்கப்படும் என்றால், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுகிறது. அப்போது நோய் எதிர்ப்பின் தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது,” என்று கூறினார். 

சரி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். அடுத்த பதிவில் தீபா சரவணன் கூறுவதை பார்க்கலாம்.

(தொடரும்…)

 

#JunkFoodReduceImmunity #HealthyFood #Immunity  #ImmuneSystem

 

Comments


View More

Leave a Comments