ஸ்விக்கியில் இனி ஸ்டீரிட் ஃபுட்களும் கிடைக்கும்...


ஸ்விக்கியில் இனி ஸ்டீரிட் ஃபுட்களும் கிடைக்கும்....

 

சென்னையில் தள்ளுவண்டியில் செயல்படும் உணவகங்கள் எளிய மக்கள், நடுத்தர மக்களின் சொர்க்கமாக திகழ்கிறது. சில தள்ளுவண்டி உணவகங்களின் சுவை பிரபல ரெஸ்டாரெண்ட்களக்கு இணையாகவே இருக்கின்றன. இப்போது தள்ளுவண்டி உணவகங்களை ஸ்விக்கி உணவு டெலிவரி செயலியில் இணைக்கும் முயற்சிகள் தொடங்கி இருக்கின்றன.

சென்னை மாநகராட்சியானது, பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரகட்டடுபாடு ஆணையம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், ஸ்விக்கி ஆகியவற்றோடு இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 500 தெருவோர வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு, சுகாதாரமான உணவு ஆகியவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சிகள் முடிவடைந்தபின்னர் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதன் பின்னர் ஸ்விக்கி செயலியின் வாயிலாக தள்ளுவண்டி உணவகம் நடத்துவோர் உணவு டெலிவரி செய்யமுடியும். இதற்கான சோதனை முயற்சியாக கடந்த நவம்பர் 25 ம் தேதி 50 தெருவோர உணவக உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் 24 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 300 பேருக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் சான்றிதழ் வங்கப்பட்டிருக்கிறது.  மெரினா, பெசன்ட்நகர், தி.நகர், எழும்பூர் பகுதிகளில் தெருவோர உணவகம் நடத்தும் 2600-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


Comments


View More

Leave a Comments