அன்பையும் சேர்த்து பரிமாறும் மடிப்பாக்கம் கிருத்திகா மெஸ்


சுத்தமான சுவையான வீட்டு சாப்பாடு என்று அறிவுப்புடன் உள்ள உணவகங்கள் நூறு சதவிகிதம் வீட்டு சாப்பாடாக இருப்பதில்லை. வெறும் விளம்பரத்துக்காக வீட்டு சாப்பாடு என்ற வார்த்தையை இணைத்திருப்பார்கள். ஆனால், உண்மையிலேயே வீட்டில் சாப்பிடுவது போன்ற ஆரோக்கியமான சைவை உணவை சாப்பிட வேண்டும் என்றால் மடிப்பாக்கம் கிருத்திகா மெஸ்ஸுக்கு செல்ல லாம்.

லட்சுமி-சுப்பிரமணியன் தம்பதி இந்த மெஸ்ஸை நடத்தி வருகிறது. இந்த முதிய வயதிலும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து உணவு சமைக்கும் பணிகளை லட்சுமி பாட்டி மேற்கொள்கிறார். பின்னர் 4.30 மணிக்கு எழுந்து அவரது சமையலுக்கு கணவர் சுப்பிரமணியனும் துணை புரிகிறார். இவரது மகள் திருமண வயதில் மூளை கட்டி காரணமாக இறந்து விட்டார். அவரது திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில் இந்த மெஸ்ஸை இவர்கள் தொடங்கி னர். கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித தடையும் இன்றி அவர்கள் மெஸ் நடைபெற்று வருகிறது.

காலையில் இட்லி, பொங்கல், பூரி கிழங்கு ஆகியவை இந்த மெஸ்ஸில் சூடாக , சுவையாக கிடைக்கும். மதியம் சாம்பார், ரசம், தயிர், பொறியல் வத்தகுழம்பு என அருமையான மதிய உணவு கிடைக்கும். இரவுக்கு சப்பாத்தி, இட்லி, தோசை தருகின்னர்.

அன்லிமிடெட் சாப்பாடு 50 ரூபாய் மட்டும்தான். காலை, இரவு உணவும் கூட குறைந்த விலையில் தரமாக கிடைக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் காலை உணவோடு மெஸ் மூடப்படும்.      

இந்த உணவகத்தை நடத்தும் இந்த தம்பதி தங்களுக்காக எதுவும் தனியாக சமைத்துக் கொள்வதில்லை. மெஸ்ஸுக்காக சமைக்கும் உணவையே உட்கொள்கின்றனர். இவர்களுடைய மகன் டெல்லியில் பணியாற்றுகின்றார். அவரது மனைவி குழந்தைகள் கேரளாவில் வசிக்கின்றனர். இவர்களையும் டெல்லிக்கு வரும்படி மகன் அழைத்தபோதிலும், இந்த உணவகத்தை நடத்துவதை விட்டுவிட்டு வரமுடியாது என்று இருவரும் மறுத்து விட்டனர். தங்கள் உடல் நிலை அனுமதிக்கும் வரை இந்த மெஸ்ஸை நடத்துவது என்று அவர்கள் தீர்மானமாக முடிவு செய்திருக்கின்றனர். சுப்பிரமணியனுக்கு தொண்டை புற்று நோயுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார். எனினும் தொடர்ந்து மெஸ்ஸில் பணிகளை மேற்கொள்கிறார்.  இந்த மெஸ்ஸை தொடர்பு கொள்ள 9176087997 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.

மக்களுக்கு உரிய விலையில் உணவு அளிக்கும் இந்த தம்பதியின் செயல் இன்னும் நீண்ட நாட்களுக்குத் தொடர வேண்டும் என்பதே நமது ஆசை.

-ருசிகன்


Comments


View More

Leave a Comments