சென்னையில் நம்மாழ்வார் மக்கள் குழு நடத்தும் மரபு திண்பண்டம் தயாரிப்பு பயிற்சி
மரபு திண்பண்டம் தயாரிப்பு குறித்து ஆவூர் முத்து பயிற்சி அளிக்கிறார். அக்டோபர் 1ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியில் தேன்குழல், கரும்புச் சர்க்கரை லட்டு, தூயமல்லி கை-முறுக்கு, கரும்பு சர்க்கரை மைசூர்பா, நவதானிய மிக்சர் ஆகியவை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

தித்திப்பு சேவு, கேரட் மைசூர்பா, எள் இடி உருண்டை, சிறுதானிய உருண்டைகள், சிறுதானிய முறுக்குகள் தயாரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும்.பயிற்சிக்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.பயிற்சியில் பங்கேற்க 9566667708, 9600873444 ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்யவும். குமார ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி, காந்தி நகர், அடையார், சென்னை என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது.
#AgriEvent #OrganicAgriculture #NatureLifeStyle #OrganicFoods #SiddhaMedcine #TraditionalEventInChennai

Comments
View More