அனைவருக்கும் உணவு ; அரசியல் ஆலோசகரின் அடடா திட்டம்


இந்திய அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அனைவருக்கும் அன்னம் என்ற அனைவருக்கும் உணவு அளிக்கும் திட்டம் ஒன்றை தொடங்கி சபாஷ் பெற்றுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியா  முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக ஏழை எளியவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை கூட உணவு உண்ண முடியாமல் அவதிப்படுகின்றனர். பசியோடு இருப்பவர்களின் பசியை போக்குவதற்காக அட்சய பாத்திரம் போல பிரசாந்த் கிஷோர் முன்வந்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் சார்பாக அனைவருக்கும் அன்னம் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

டெல்லி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நாடு முழுவதும் 25 முக்கியமான நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.  நாடு முழுவதும் உள்ள உணவு வழங்கும் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து இந்த திட்டத்தை ஐபேக் நிறுவனம் செயல்படுத்து கிறது.

சென்னையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மையப்படுத்தப்பட்ட ஒரு  சமையல் அறையில் உணவு தயாரிக்கப்பட்டு, உணவு விநியோகிக்கும் பணியில் உள்ள ஊழியர்கள் உதவியுடன் சென்னை முழுவதும் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. உரிய ஆரோக்கியமான முறையில், சுகாதாரமாக தயாரிக்கப்படும் உணவுகள், அதே சுகாதரத்துடன் எளியவர்களுக்கு கிடைப்பதையும் ஐபேக் நிறுவனம் உறுதி செய்துள்ளது. உணவு தயாரிப்பு, விநியோகம் என்று எந்த வகையிலும் நோய் தொற்று பரவி விடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கின்றனர். அவர்கள் முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உணவு வேண்டுவோர், உதவி வேண்டுவோர் 6900869008 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Comments


View More

Leave a Comments