நார் சத்து உணவுகளை உண்பதால் என்ன நன்மைகள் தெரியுமா?
முழுதானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகளில் நார்சத்துகள் அதிகம் உள்ளன. இவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நார் சத்துகள் அதிகம் உள்ள பொருட்கள்
பயறு வகைகள்,
பீன்ஸ்
பார்லீ
கொள்ளு
பசலைக்கீரை
பட்டர் ப்ரூட்
உலர் திராட்சை
அத்தி
பேரிச்சம் பழம்
பாதம் பருப்பு,
நிலக்கடலை
அக்ரூட்
ஆப்பிள்
ஆரஞ்சு
பேரிக்காய்
ப ப்பாளி
மஞ்சள் பூசணி
நீங்கள் நார்சத்துகளை குறைவாக எடுத்துக் கொண்டாலும், தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் உப்பிசம் ஏற்படும். ஜீரண சக்தி பாதிகப்பபடும்.
தேவையான அளவு நார் சத்து உணவுப் பொருட்களை நீங்கள் உட்கொள்ளாவிட்டால், நீண்ட நேரம் இரவு தூங்கி எழுந்த பின்னரும், உங்களுக்கு நாள் முழுவதும் சோம்பலாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். போதுமான அளவு நார் சத்து உணவுப்பொருட்களை உட்கொள்ளாவிட்டால், உங்களுக்கு அடிக்கடி பசிக்கும். பசிக்கும்போது பதப்பட்டுத்தப்பட்ட உணவுகள், ஸ்நாக்ஸ் போன்றவை சாப்பிடுவதால் உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கக் கூடும். எனவே, நார்சத்துகளை போதுமான அளவு எடுத்துக் கொள்வதை உறுதி செய்யுங்கள்.
Comments