
எளியவர்களுக்காக குறைந்த விலையில் பிரியாணி வழங்கியவர்...
எளியவர்கள் தங்களுக்கு கிடைக்கும் குறைந்த வருவாயைக் கொண்டு எளிய உணவுகளை உண்டு தங்களது பசியைப் போக்குகின்றனர். ஆனால், அவர்களுக்கும் பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆசைகளும் இருக்கத்தான் செய்யும்.
சென்னை அருகே முன்னாள் ராணுவத்தினர் இணைந்து குறைந்த விலையில் பிரியாணி விற்பனை செய்து அசத்தி இருக்கின்றனர். கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு இந்த சேவையை வழங்கியதால் பசியாறிய எளியவர்கள் பலர் அவர்களை வாழ்த்தினர்.
சென்னை பூந்தமல்லி டிரங்க் சாலையில் ஜெயபால் என்ற முன்னாள் ராணுவ வீரர் பிரியாணிக்கடை நடத்தி வருகிறார். இவர் தமது நண்பர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டியை ஒட்டி எளியவர்களுக்கு தரமான பிரியாணியை தயாரித்து வழங்க வேண்டும் என்று திட்டமிட்டனர். அதன்படி சிக்கன் , மட்டன் பிரியாணியை அவர்கள் தயாரித்தனர். சீரக சம்பா அரிசியில் சூடான, சுவையான பிரியாணி தயாரானது. எளியவர்களும் வா ங்க க் கூடிய விலையில், சிக்கன் பிரியாணி 50 ரூபாய்க்கும், முட்டை பிரியாணி 30 ரூபாய்க்கும் விற்பனை செய்தனர். அவர்கள் கடை அமைந்துள்ள பகுதியை சுற்றி வசிக்கும் எளியவர்கள் கடை முன்பு குவிந்தனர். அறிவித்தபடி ஜெயபாலும் அவரது நண்பர்களும் ஆயிரம் பேருக்கு குறைந்த விலையில் பிரியாணி வழங்கினார்கள்.
“ பிரியாணியை 100 ரூபாய்க்கு குறைந்து வாங்கி சாப்பிட முடியாது. நாங்கள் எளிய மக்களும் கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் மிக குறைந்த விலையில் பிரியாணி தயாரித்து விற்பனை செய்தோம். சீரக சம்பா அரிசியில், தரமான பொருட்களை கொண்டு சூடாக, சுவையாக தயாரித்து விற்பனை செய்தோம்” என்று ஜெயபாலும் அவரது நண்பர்களும் கூறினர்.
Comments