காலை உணவு எப்போது எப்படி இருக்க வேண்டும்


ஆங்கிலத்தில் காலை உணவை பிரேக் பர்ஸ்ட் என்று சொல்வார்கள். அதாவது இரவு தூங்கிய பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காலை உணவு சாப்பிடுவதை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இரவு சாப்பிட்டதில் இருந்து 12 மணி நேரம் கழித்து காலை உணவை சாப்பிட வேண்டும்.

காலை உணவு என்பது நமது உடலின் ஆற்றலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே காலை உணவை தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். காலை நேரத்தில் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு உடல் உறுப்புகள் மற்றும் மூளை இயங்க குளுக்கோஸ் மிகவும் அவசியம்.எனவே காலை உணவாக இட்லி போன்ற ஆவியில் வேக உவைத்த உணவுகள் அல்லது நீராகார உணவாக கஞ்சி போன்றவைகளை சாப்பிடலாம். பழங்களைப் பொறுத்தவரை காலையில் புளிப்பு சுவையுள்ள பழங்களைத் தவிர பிற பழவகைகளை சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காலை உணவை வித்தியாசமாக உண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் ஓட்ஸ், முட்டை, வாழைப்பழம் ஆகியவை சாப்பிட்டுவிட்டு கிரீன் டீ குடிக்கலாம்.

மொத்த த்தில் காலை உணவை தவிர்க்கக் கூடாது என்பதுதான் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதை மனதில் கொண்டு உங்கள் காலை உணவை சாப்பிடுங்கள்.


Comments


View More

Leave a Comments