இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 10 கிலோ உணவு தானியம்; சோனியா காந்தி கோரிக்கை


கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு வரும் மே 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் வாழ்வாரத்துக்காக இடம் பெயர்ந்து நடுவழியில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உணவு தானியம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள கடித த்தில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஏராளமானோர் வறுமையில் உள்ளனர். கொரானாவை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் யார் ஒருவரும் பட்டினி கிடக்க க் கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு செப்டம்பர் மாதம் வரை தலா 10 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும்.

அதே போல ரேஷன் கார்டு இல்லாத இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தலா பத்து கிலோ உணவு தானியங்கள் ஆறு மாதங்களுக்கு விலையில்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Comments


View More

Leave a Comments