கிழக்கு ரயில்வே ரயில்களில் நவராத்திரி விரத உணவுகள்


நவராத்திரியை முன்னிட்டு கிழக்கு ரயில்வே மண்டலத்தில் 400- ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு  நவராத்திரி விரத உணவுகள் வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. 

Must Read: சிறுநீரகத்தின் ஆரோக்கியத்துக்கு மேம்படுத்தும் உணவுகள் என்ன தெரியுமா?

நவராத்திரி விரத உணவு வேண்டும் என சொல்வோர் ஃபுட் ஆன் டிராக் செயலி வழியாக உணவை ஆர்டர் செய்ய வேண்டும்.  ரயில்வே இணையதளம் மூலமும் நவராத்திரி உணவை ஆர்டர் செய்யலாம். அல்லது 1323 என்ற எண்ணின் வாயிலாகவோ நவராத்திரி உணவை ஆர்டர் செய்யலாம். 

விரத முறைப்படி தயாரிப்பு 

நவராத்திரி உணவுகளை வீட்டில் தயாரிப்பது போல பூண்டு, வெங்காயம் இல்லாமல் தயாரித்து வழங்குகின்றனர். அதே போல இந்து உப்பு உபயோகிக்கப்பட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ரயிலில் நவராத்திரி உணவுகள்

உருளைக்கிழங்கு போண்டா, ஜவ்வரிசி கட்லெட், முந்திரி, அடை பாயாசம் உள்ளிட்ட நவராத்திரி உணவுகள் வழங்கப்படுகின்றன. .அக்டோபர் 5-ந்தேதி வரை  நவராத்திரி உணவுகளை ஆர்டர் செய்து  பெற முடியும்.

அசைவ உணவுகள் 

அசைவம் சாப்பிடும் பயணிகள்  சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட உணவுகளையும் ஆர்டர் செய்யலாம். பெங்காலி வகை அசைவ உணவுகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

#NavaratriFoodAtTrain #EastRailwayServeNavaratriFood   #EastRaiwayServeNVfood

 
 
 

Comments


View More

Leave a Comments