உணவு முறைகளிலேயே குளிர்காலத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம்


அதிக குளிர், அதிக கோடைகாலங்களில் நோயாளிகள் எப்போதுமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வானிலை மாற்றத்தால், உடலில் மாறுதல்கள் ஏற்படக் கூடும். குறிப்பாக குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்களை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள உணவுகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு எப்போதும் எதையாவது சாப்பிட வேண்டும் போல எண்ணம் ஏற்படும். எனவே, கண்ட, கண்ட நொறுக்குத் தீனிகளை உண்பதை தவிர்க்க வேண்டும். பழங்கள், பச்சைக்காய்கறிகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு சாப்பிடலாம்.

நார்சத்து அதிகம் உள்ள உணவுகளையே சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக உண்ண வேண்டும். புரதம் உள்ள உணவுகளையும் காலையில் சாப்பிடலாம். குளிர்கால சீசனுக்கு ஏற்ற சக்கரைவள்ளிக் கிழங்கு, வேக வைத்த முட்டை, ஆரஞ்சு பழங்கள், கொய்யா உள்ளிட்ட பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது.

சர்க்கரை நோயாளிகள் காலை உணவையோ அல்லது மதிய உணவையோ உண்ணாமல் தவிர்ப்பது நல்லதல்ல. குறிப்பாக மதிய நேரத்தில் கீரை வகைகளை உண்ணலாம். பசலைக்கீரை உண்பது  இன்னும் நல்லது. மல்டிகிரைன் சப்பாத்தி எனச்சொல்லப்படும் பலதானியங்களை அரைத்த மாவில் செய்யப்படும் சப்பாத்தி மிக, மிக நல்லது. பச்சைக்காய்கறிகளை வேகவைக்காமல் உண்பதே நல்லதுதான்.

இரவு உணவு உண்பதிலும் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். காய்கறி சூப் வகைகள், புரூட் சலாட் எனப்படும் பழக்கலவைகள் சாப்பிடலாம். பல தானிய மாவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி உண்ணலாம். இப்படியெல்லாம் கட்டுப்பாடுடன் உணவு எடுத்துக் கொண்டால் குளிர் காலம் என்றாலும் சர்க்கரை நோயை கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்ள முடியும்.

 

 


Comments


View More

Leave a Comments