சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி?
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது விநாயகருக்கு அல்லது கணபதிக்கு, யானை முகனுக்கு படைப்பதில் சிறப்பு வாய்ந்த பிரசாதம் கொழுக்கட்டையாகும்.
தமிழ் பாரம்பரிய உணவுகளிலும் கொழுக்கட்டைக்கு மிக மிக முக்கியமான இடம் உள்ளது. கொழுக்கட்டை . எளிதில் ஜீரணம் அடையக்கூடிய உணவாகவும், ஆவியில் வேக வைத்து தயாரிக்கும் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாகவும், ஸ்நாக்ஸ் ஆகவும் கொழுக்கட்டை திகழ்கிறது.

இந்த கொழுக்கட்டை தயாரிக்க அரிசிமாவு, உருண்டைவெல்லம், எள் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் அதில் உள்ள சத்துகள் கொழுக்கட்டையில் கிடைக்கிறது. பாரம்பர்யமாக நம் முன்னோர்கள் பல வகைகளில் கொழுக்கட்டையை தயாரித்து சாமிக்கு படைத்திருக்கின்றனர்.
கொழுக்கட்டையில் அரிசி மாவுக்குப் பதிலாக இயற்கை தானியங்கள் மாதிரியான உணவுப்பொருட்கள் கொண்டும் கொழுக்கட்டை செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவுக்குப் பிடித்தமான கொழுக்கட்டையை செய்வது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இங்கு கம்பு மாவில் காரமான கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். கம்பு மாவு – 1 கப் எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் வெங்காயம் ஒன்றும் எடுத்துக் கொள்ளுங்கள். கறிவேப்பில்லை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். உளுத்தம்பருப்பு 1ஸ்பூன் போதுமானது. கடலைப்பருப்பு 2 ஸ்பூன் போதுமானது. கடுகு, வரமிளகாய், உப்பு ஆகியவற்றை உங்கள் சுவைக்கு ஏற்றபடி தேவையான அளவு சேர்த்தால் போதும்.
முதலில் நம்மிடம் தயாராக உள்ள கம்பு மாவை நன்றாக வறுத்து கொள்ளவேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு உளுத்தம் பருப்பு. கடலைப்பருப்பு ஒவொன்றாக சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வரமிளகாய், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும். கம்பு மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். பின்னர் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிடிக்க வேண்டும்..பிடித்த கொழுக்கட்டைகளை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான கம்பு மாவு கொழுக்கட்டை ரெடி.
இதே போல இனிப்பு கம்புமாவு கொழுக்கட்டையும் எப்படி செய்வது என்று பார்க்கலாம். கம்பு மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள், பொடித்த வெல்லம் முக்கால் கப், தேங்காய் துருவல் அரை கப், நான்கு ஏலக்காய் , நெய் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும். கம்பு மாவை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் பாகு காச்சி எடுத்துக் கொள்ளுங்கள்.
மாவுக் கலவையில் ஏலக்காய்த்தூள், நெய், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். இதில் வெல்லப் பாகை கலந்து பிசையவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிடிக்க வேண்டும்..பிடித்த கொழுக்கட்டைகளை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான கம்பு மாவு இனிப்பு கொழுக்கட்டை தயார். விநாயகர் சதுர்த்தியை ஆரோக்கியமாக கொண்டாடிய பலனும் கிடைக்கும்.
#Kolukattai #VinayagarChatuthiFestival #KolukattaiFood #HowToPrepareKolukattai

Comments
View More