
உலக ஆரோக்கிய தினம்; உங்கள் உடலுக்கு வலு தரும் பாதாம் பருப்பு....
ஏப்ரல் 7-ம் தேதி என்பது உலகம் முழுவதும் உலக ஆரோக்கிய தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியிருக்கும் நிலையில் இன்றைய ஆரோக்கியதினம் முக்கியத்துவம் பெறுகிறது.
நம் உடலுக்கு அதிக சத்துக்களை கொண்டது பாதம் பருப்பு. இதில் 15 வகையான நுண்ணூட்டசத்துகள் உள்ளன என்பது பலரும் அறியாத செய்தி.
பாதாம் பருப்பு சாப்பிடுவது குறிப்பாக இதயநோய் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தரக் கூடியதாகும். தினமும் 30 கிராம் பாதாம் பருப்பு சாப்பிடும்போது, இதயநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. நம் உடலில் உருவாகும் கெட்ட கொழுப்புகள் இதயத்துக்கு பாதகம் விளைவிப்பவை. ஆனால், பாதாம் பருப்பு போன்ற சில உணவு வகைகள் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் திறன் கொண்டவை. ஆரோக்கியத்துக்கு நல்லது.
பாதாம் பருப்பு சாப்பிடுவதில் இன்னொரு நன்மை இருக்கிறது. ஆம், உங்கள் உடலில் தோல் விரைவில் முதிர்ச்சியடைவதை தடுக்கிறது. சருமத்தை பாதுகாக்க கண்ட, கண்ட களிம்புகளை பூசுவதை விடுத்து, தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் சருமம் மிளிர்வதை பாதாம் பருப்பு உறுதி செய்யும்.
வயதுக்கேற்ற , உயரத்துக்கு ஏற்ற உடல் எடை கொண்டிருக்க வேண்டும். அதீத உடல் எடை என்பது பல்வேறு ஆபத்துகளை கொண்டு வரும். பாதாம் பருப்பு உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது. தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுவது குறிப்பாக தொப்பை கொழுப்பை குறைக்கும் இடுப்பு சுற்றளவை குறைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Comments