5வது எட்டில் இருக்கும் வயதினருக்கான ஆரோக்கிய உணவுகள்


வாழ்க்கையை எட்டு, எட்டாக பிரித்தால் 5வது எட்டில் அதாவது 40வது வயதில் இருக்கிறவர்கள் உடல்நலனிலும், உணவு முறையிலும் ஆரோக்கியத்தை கடைப்பிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் 40 வயதுதான் முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் இதை நோக்கித்தான் போகின்றோம் என்ற தெளிவு ஓரளவுக்கு இருக்கும். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்திலும் தெளிவு இருக்க வேண்டியது அவசியம்.

மனிதர்களுக்கு அவர்களின் 40 வயதுக்குப் பின்னர்தான் உடல் உள்ளுறுப்புகள் செயல்பாடுகள் குறையத் தொடங்கும். ஜீரண உறுப்புகள் உள்ளிட்டவை பலம் குறைய ஆரம்பிக்கும்.

40 வயதுக்குப் பின்னர் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பு, மனச்சோர்வு போன்றவை ஏற்படக் கூடும். எலும்பு தேய்மானம் ஆரம்பிக்கும். எனவே 40 வயதுக்குப் பின்னர் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்க உணவுகளை எடுத்துக்  கொள்ளவேண்டும். குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிட வேண்டும். தர்பூசணி மற்றும் பெர்ரி பழங்களில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மஞ்சள். பூண்டு, இஞ்சி ஆகிய பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்க இவை உதவும். குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் அதாவது மோர் போன்ற பானங்களை அருந்தலாம்.  

40 வயதுக்குப் பின்னர் முக்கியமான உப்பைத் தவிர்க்க வேண்டும். அதிக உப்பு ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். நெய்யில் கெட்ட கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் நெய் அளவோடு பயன்படுத்தலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் அதிகம் உட்கொள்ளலாம்.

நாற்பது வயதுக்கு மேல் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியதும். இரவில் ஆழ்ந்த தூக்கமும் அவசியம் தேவை. பதற்றமின்றி இருக்க உடற்பயிற்சிகள், தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 


Comments


View More

Leave a Comments