ஆரோக்கியமான சரிவிகித சத்துணவு- உலகசுகாதார நிறுவனத்தின் பரிந்துரை
உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் ஆரோக்கியமான சரிவிகித சத்துணவு என்ற தலைப்பில் நாம் பின்பற்றவேண்டிய குறிப்புகள் உள்ளன. இந்த கொரோனா பரவல் காலத்தில் எந்த உணவு ஆரோக்கியமாக இருக்கும் என்று தினந்தோறும் பலருக்குச் சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதனைத் தெளிவு படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம், ஆரோக்கியமான சீரான சரிவிகித உணவு பற்றிய தகவல்களை தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
1.காய்கறிகள், பழங்கள் உட்பட வெவ்வேறு வகையான உணவுகளை உட்கொள்ளுங்கள்
ஒவ்வொரு நாளும் கோதுமை, அரிசி போன்ற முழு தானியங்கள் , பட்டாணி, அவரை இன காய்கறிகள், பீன்ஸ் உள்ளிட்டவை, பிரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவைதவிர மீன், இறைச்சி, முட்டை, பால் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிக நார்சத்துக் கொண்ட பதப்படுத்தப்படாத மக்காச்சோளம், தினை, ஓட்ஸ், கோதுமை மற்றும் சிகப்பரிசி போன்றவற்றையும் உண்ணலாம். இவற்றை உண்ணும்போது நிறைவான உணவு உண்ட உணர்வு ஏற்படும்.
நொறுக்குத் தீனிகளைப் பொறுத்தவரைப் பச்சைக்காய்கறிகள், பிரஷ்ஷான பழங்கள், உப்பு சேர்க்கப்படாத பாதம் பருப்பு, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
உப்பு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து நாளை பார்க்கலாம்...
Comments