காலையில் எதை சாப்பிட வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் தெரியுமா?
ஒரு நாளின் காலையில் நாம் சாப்பிடும் உணவுதான் அன்றைய நாளின் நம் உடலின் ஆற்றலின் தொடக்கமாக அமைகிறது. எனவே காலை உணவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும். நான் ரொம்ப பிசி என்றோ அல்லது நான் எப்போதுமே காலை உணவை சாப்பிடமாட்டேன் என்றோ கூறி கொள்வது நீங்களே உங்கள் உடலுக்கு தீங்கு செய்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
சரி எவையெல்லாம் காலை நேரத்தில் சாப்பிட வேண்டிய சரியான உணவு?
சந்தையில் நாம் வாங்கிய பழங்களில் இருந்து நாமே தயாரித்த பழரசங்களைக் குடிக்கலாம். பால், தயிர், பாலடைக்கட்டி ஆகியவற்றை சாப்பிடலாம்.
இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், கேழ்வரகு தோசை, ஆகியவற்றை காலை வேளையில் சாப்பிடலாம்.
முட்டை, முழு தானியங்களை பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ரொட்டி, வேக வைத்த காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.
வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள காலை உணவுகளை சாப்பிடலாம். நாள முழுக்க சுறுசுறுப்பாக இருக்கலாம். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கொய்யாப்பழம், மாம்பழம், அன்னாசி பழம், ப ப்பாளி ஆகியவற்றிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று தெரியுமா
காலை நேரத்தில் காஃபி சாப்பிடாமல் இருந்தால் சிலருக்கு வேலையே ஓடாது. காபியில் உள்ள காஃபின் காரணமாக அதனை குடிக்கும்போது விழிப்புணர்வு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது என்றாலும் கூட, அளவோடு காப்பி குடிப்பது நல்லது. காலை நேரத்தில் அளவுக்கு அதிகமாக காஃபி குடித்தால் அமைதியின்மை, படபடப்பு, பதட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடும். வெறும் வயிற்றிலும் காப்பி குடிக்கக் கூடாது.
கேக்குகள் உள்ளிட்ட பேக்கரி உணவுகளை காலை வேளையில் உண்பதை தவிர்க்கவும். பாட்டிலில் அடைக்கப்பட்ட பழசாறுகளையும் சாபிபடக் கூடாது. இவற்றில் சுவை இனிப்பு ஆகியவற்றைத் தவிர உடலுக்கு நன்மை பயக்கும் சத்துகள் ஏதும் இல்லை.
Comments