வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் மனிதநேயங்கள்....


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தெருக்களில் திரியும் நாய்களுக்கு உணவு அளிக்கும் உன்னதப்பணியில் இந்தியா முழுவதும் பல இடங்களில் பல தனிநபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த பால் கோஸ்வாமி என்பவர் தமது காரில் பெங்களூர் நகரில் எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் தெருக்களில் அனாதைகளாகத் திரியும் நாய்கள், பூனைகளுக்கு உணவு அளித்து வருகிறார்.

இதே போல கெளஸ்டவ் முகர்ஜி என்பவர் தெருநாய்களுக்கு தம் வீட்டில் உணவு தயாரித்து அதனை எடுத்துச் சென்று வழங்குகிறார்.

இதே போல புனே நகரில் உள்ள ஷவன்யா பாண்டே என்பவர் தமது என்பீல்டு புல்லட்டில் சென்று நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். தினமும் அவர் 30-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு அவர் உணவு வழங்குகிறார்.

#covid19 #coronavirus #lockdown #foodfordogs


Comments


View More

Leave a Comments