10 ரூபாய்க்கு உணவு இது புதுச்சேரி புதுமை


புதுச்சேரி உழவர்கரை நகராட்சியின் சார்பில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

பத்து ரூபாய் விலையில் வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், சாம்பார், புளி, தயிர் உள்ளிட்ட சாத வகைகளை உழவர் கரை நகராட்சி வழங்கி வருகிறது.. நகராட்சியுடன் நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் நகர வாழ்வாதார மையம் என்ற அமைப்பும் கைகோர்த்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மிகவும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் உழவர்கரை நகராட்சி (ஜவகர் நகர்), கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள உழவர்கரை நகராட்சி நவீன மீன் அங்காடி, கம்பல் கலை அரங்கம் ஆகிய இடங்களில் வழங்கப்படுகின்றன.

உணவு தவிர காய்கறி , மளிகைப் பொருட்களை வீடு தேடி சென்று வழங்குகின்றனர். காய்கறி , மளிகைப் பொருட்கள் தேவைப்படுவோர் 7806801159/60 /61 /62 ஆகிய மொபைல் எண்களில் கேட்டுப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Comments


View More

Leave a Comments