தாய்பாலுக்குப் பின்னர் குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும்.


பிறந்த குழந்தைகளுக்கு தாய்பாலை விட ஆரோக்கியமான சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை. பிறந்து ஒரு ஆண்டு வரை குழந்தைகளுக்கு தாய்பால் மட்டுமே கொடுப்பது மிகச்சிறந்ததாக இருக்கும்.

ஒரு ஆண்டுக்குப் பின்னர் என்னென்ன உணவுகளைக் கொடுப்பது, கொடுக்கக்கூடாது என்பது குறித்து இளம் தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

 

பசும்பால் கொடுக்கக்கூடாது

குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் தாய்கள், தங்களிடம் போதுமான அளவு தாய்பால் சுரக்கவில்லை எனில் உடனே பசும்பால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், பசும்பாலில் உள்ள கேசின் என்ற புரத த்தை எளிதாக செரிக்கும் அளவுக்கு குழந்தையின் செரிமான உறுப்புகள் வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே, பசும்பாலுக்குப் பதிலாக வேறு திரவ ஆகாரங்களை சேர்க்க வேண்டும். பசும்பால் கொடுக்கூடாது.

உப்பு

தாய்மூலமே குழந்தைக்கு தேவையான சோடியம் கிடைத்து விடும். இதைத் தாண்டி உணவிலும் உப்பு சேர்த்துக் கொடுத்தால் குழந்தைக்கு உடலில் உப்பு அதிகமாக சேரும் அபாயம் உண்டு. எனவே குழந்தைகளுக்கு இணை உணவுகள் தரும்போது உப்பு சேர்ப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இனிப்பு

குழந்தைக்கு ஒரு ஆண்டு வரை இனிப்பு கொடுக்கக்கூடாது. குறிப்பாக வெள்ளைச்சர்க்கரையைக் கொடுக்கக் கூடாது. இனிப்பு நிறைந்த தேன் கூட சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பழசாறு கொடுத்தாலும் கூட அதில் இனிப்பு சேர்க்க வேண்டியதில்லை. பழத்தில் இருக்கும் இனிப்பு சுவையே போதுமானதாக இருக்கும்.

முட்டை

குழந்தைக்கு ஒரு வயது ஆனபின்னரே முட்டை கொடுக்க வேண்டும். அதுவும் நன்றாக வேக வைக்கப்பட்ட முட்டைகள் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆஃபாயில், ஆம்லேட் போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது.

இணை உணவுகள்

குழந்தைகளுக்கு பல் முளைக்கும் வரை இணை உணவுகளை கூழாக மாற்றித்தான் கொடுக்க வேண்டும். திரவ உணவுகளைக் கொடுக்கலாம். ஒரு ஆண்டு வரை இணை  உணவுகளைத் தவிர்து தாய்பால் மட்டுமே கொடுப்பது சிறந்தது.

 


Comments


View More

Leave a Comments