
பளபளக்கும் சருமத்துக்கு இந்த பழரசங்களை அருந்துங்கள்
கற்றாழை ஜூஸ்
கற்றாழையை ஆங்கிலத்தில் ஆலுவேரா என்று சொல்வார்கள். கற்றாழை ஜூஸ் உங்கள் சருமத்தின் பளபளப்புக்கு மட்டும் அல்லாமல் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கும் உதவும். சருமத்தின் இயற்கையான பளபளப்பை தொடர்ந்து பராமரிக்க உதவும் வைட்டமின்கள், தாதுக்கள் கற்றாழையில் நிறைந்து இருக்கின்றன.
கீரை ஜூஸ்
கீரைகளின் இலை, காய்கறிகளின் சாறுகள் சுவையாக இருக்காது. எனினும் அவை உங்கள் தோலுக்கு நன்மை அளிக்கும். கீரை சாற்றில் இரும்பு சத்து, வைட்டமின் கே ஆகியவை உள்ளன. இது சருமத்துக்கு ஏற்றதாகும். கீரைகளில் வைட்டமின் சி, இ மற்றும் மாங்கனீஸ் ஆகியவை உள்ளன. எளிதாக அன்றாடம் கிடைக்கக் கூடிய கீரையை இப்படியும் சாப்பிடலாம்.
இஞ்சி ஜூஸ்
இஞ்சியில் உடலுக்குத் தேவையான கனிமங்கள், பொட்டாசியம் போன்றவை இருக்கின்றன. இவை உங்கள் தோலினை ஒளிரச்செய்யும். எலுமிச்சையில் பல சத்துகள் உள்ளன. எலுமிச்சையுடன் இஞ்சி கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் வலுப்படும்.
தக்காளி ஜூஸ்
தோலில் சுருக்கங்கள், கோடுகள் தோன்றி வயதானத்தோற்றைத் தருவதை தக்காளி தடுக்கும். தோல் புத்துணர்ச்சியுடன், இளைமையாக தோற்றம் அளிப்பதற்கும் உதவும். பளபளமான தோலுக்கு தக்காளி ஜூஸ் மிகவும் சிறந்தது.
கேரட், பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், ஃபோலிக் அமிலம், மாங்கனீஸ், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் நிரம்ப உள்ளன. பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு தோல் பளபளப்பாக இருக்கும். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இது தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
மாதுளை ஜூஸ்
மாதுளையும் ரத்த த்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. உங்கள் தோலின் வளர்ச்சிக்கும், பளபளப்புத் தன்மைக்கும் உதவுகிறது. தோலின் செல்கள் புதுப்பித்துக் கொள்வதற்கு மாதுளை உதவும். வயதான தோற்றத்தை குறைத்து இளைமையுடன் இருக்க உதவும்.
Comments