உலக உணவு தினத்தில் ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள்...
உணவு வீணாவதை தடுக்கவும், சமச்சீரான உணவு உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டின் உலக உணவு தினத்தில் சூப்பர் உணவு பொருட்களை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் .
மஞ்சள்தூள்
நமது பாரம்பர்ய உணவு முறையில் மஞ்சள் தூள் இடம் பெறாத உணவுகள் என்று பார்த்தால் மிக குறைவுதான். ஆரோக்கியத்தின் பல நன்மைகளைக் கொண்டுள்ள மஞ்சள் பெரும்பாலான உணவுகளில் இடம் பெற்றுள்ளது. மஞ்சள் தூளில் குர்குமின் நிறைந்திருக்கிறது. அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டது. இந்திய பாரம்பர்ய மருத்துவத்தில் மஞ்சள்தூள் பயன்படுத்தப்படுகிறது. மூளை செயல்பாடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் உள்ளிட்ட பண்புகளையும் கொண்டிருக்கிறது. உடல் எலும்புகள், மூட்டுகள் வலுப்பெறுவதற்கும் மஞ்சள் தூள் உதவுகிறது.
தயிர்
பசு, எருமை ஆகிய கால்நடைகள் மூலம் கிடைக்கும் பாலில் இருந்து கிடைக்கும் தயிரில் புரோட்டின், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன. நமது குடலின் நலத்துக்கு மிகவும் உகந்தது தயிர். குடல் அல்சருக்கு மிகச்சிறந்த குணப்படுத்தும் தன்மை கொண்டது தயிர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது. எலும்புகளுக்கு வலுவூட்டக்கூடியது.
பாதாம் பருப்பு
ஏராளமான நுண்ணூட்ட சத்துகளைக் கொண்டது பாதாம்பருப்பு. நல்ல ஆரோக்கியமான கொழுப்பை கொண்து. புரதம், நார்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள் நிறைந்தது. இதனால் பாதம்பருப்பு இதய ஆரோக்கியத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது. மாலைநேர நொறுக்குத் தீனியாகவும் பாதாம் பருப்பு பரிந்துரைக்கப்படுகிறது.
ப்ரோக்கோலி
முட்டை கோஸ் உள்ளிட்ட குருசிஃபெரோஸ்(cruciferous) வகையை சேர்ந்த ப்ரோகோலி காய்கறி. முட்டை கோஸ்போன்றே இருக்கும் ஆனால், அடர் பச்சை நிறத்தில் பூ போன்று இருக்கும். ப்ரோக்கோலியில் வைட்டமின் சி மற்றும் கே உள்ளன. நார் சத்து கொண்டது. ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டது. கேன்சர் அபாயத்தை குறைக்கிறது. ஒட்டு மொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சமச்சீரான உணவு முறைக்கு ப்ரோக்கோலி பரிந்துரைக்கப்படுகிறது.
வெண்ணைய் பழம்
அவகோடா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெண்ணைய் பழத்தில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. பொட்டாசியம், வைட்டமின் கே, மற்றும் இ மற்றும் பி கொண்டுள்ளது. அவகோடாவை கொண்டு பல உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
நமது உணவுப் பாரம்பர்யத்தில் இடம் பெற்றுள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. நார்சத்து அதிகம் உள்ளது. ஆக்ஸிஜனேற்ற பண்பை கொண்டது. வழக்கமான உருளைக்கிழங்கை விடவும் இதில் சர்க்கரை உயர்த்தல் குறியீடு குறைவாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக நிர்வகிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கண்பார்வைக்கு உகந்தது.
சியா விதைகள்
சியா விதைகளில் நார் சத்து, புரதம், ஓமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் பல்வேறு நுண்ணூட்ட சத்துகள் உள்ளன. இதனால், நம் உடலுக்கு அதிக அளவிலான நீர் சத்துக்கு கிரகிக்கப்படுகிறது. வயிறு நிறைந்த உணர்வு இருப்பதால் நொறுக்கு தீனிகளை தின்று உடல் எடை கூடுவதை தடுக்கிறது. சீரான செரிமானத்துக்கும் சியா விதைகள் உகந்தவை.
குயினோவா
புரத சத்து நிறைந்த முழு தானியமாகும். நார் சத்து பல வைட்டமின் சத்துகள், கனிமங்கள் நிறைந்துள்ளன. அமினோ அமிலங்கள் , உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்சிதை மாற்ற முன்னெடுப்புக்கு உதவுகிறது.
சுருள் தட்டை கீரை அல்லது பரட்டை கீரை
காலே என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது கீரை வகையை சேர்ந்தது. வைட்டமின் ஏ, சி, கே ஆகியவற்றைக் கொண்டது. கால்சியம் அதிக அளவில் உள்ளது. எலும்புக்கு சிறந்த உணவாகும். இதயநோய் அபாயத்தை குறைக்கிறது. செரிமானத்தை சரி செய்கிறது.
சாலமன் மீன்
அதிக அளவுக்கு ஓமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்டது. இது இதய ஆரோக்கியத்துக்கு உகந்தது. அதிக அளவு புரத சத்து உள்ளது. வைட்டமின் டி மற்றும் செலினியம் போன்ற நுண்ணூட்ட சத்துகள் நிறைந்துள்ளன. இந்திய சாலமன் மீன் என்று அழைக்கப்படும் மீனிலும் இது போன்று நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளன. இந்திய சாலமன் மீன் என்பது தமிழில் கிழங்கான் மீன் என்று அழைக்கப்படுகிறது.
ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரியில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. குறிப்பாக ஃபிளாவனாய்டுகள் அதிகம் உள்ளன. மூளை செயல்பாடுகள் மேம்பட உதவுகிறது. இதயநோய் அபாயத்தை குறைக்கிறது. குறைந்த கலோரியுடன் அதிக நார் சத்து கொண்டதாகும். ஆரோக்கியமான நொற்று தீனியாகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
#worldfoodday2023 #worldfoodday #bestfoods #superfoods
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments