நுரையீரல், கல்லீரலை காக்கும் துளசி சுவைநீர்


 

நாம் உயிர்வாழ்வதற்கு தேவையானது காற்று. காற்றில் இருக்கும் ஆக்சீஜனை நாம் சுவாசித்து உயிர்வாழ்கின்றோம். சுவாசத்தை சீராக வைத்திருக்க நமது உடலில் உள்ள நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். மது அருந்துதல், புகையிலை உட்கொள்ளுதல், சிகரெட் புகைத்தல், பான்மசாலா போன்ற பொருடகளை உட்கொள்ளுதல் காரணமாக நுரையீரல் பாதிக்கப்படும். நுரையீரல் மட்டுமின்றி கல்லீரலும் பாதிப்புக்கு உள்ளாகும்.

நுரையீரல் கல்லீரல் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒரு அற்புதமான இயற்கை பானம் ஒன்று உள்ளது. துளசி சுவை நீர் எனப்படும் அந்தப் பானத்தை தயாரிப்பது எப்படி என்று இப்போது பார்க்கலாம். 20 துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும் வடிகட்டி பால், தேன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். இதனால், சிகரெட், புகையிலை, பான்மசாலா போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நுரையீரல், கல்லீரல் புத்துணர்ச்சி பெறும். இந்த சுவைநீர் ஆஸ்துமா நோய் பாதிப்பிலிருந்தும் மீட்கும்.

நன்றி; திரு. Maria Bellsin முகநூல் பதிவு


Comments


View More

Leave a Comments