வீட்டில் சாப்பிட்டால் மட்டுமல்ல சமைத்தாலும் ஆயுள் கூடுமாம்


வீட்டில் சமைத்து சாப்பிட்டால் நம்மை நோய்கள் அண்டாது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், வீட்டில் சமையல் செய்தாலும் நமக்கு ஆயுள் கூடும் என்று சொல்கிறார் #Devi Somnath என்ற முகநூல் நண்பர்.  

ஆயுள் கூட வேண்டும் என்றால் சமையல் பண்ணுங்க!

ஆணோ, பெண்ணோ சமையல் கலையைக் கற்றுக்கொண்டு வீட்டில் யார் சமைக்கிறார்களோ அவர்களுக்கு ஆயுள் விருத்தியாகும். காரணம் தெரியுமா! சமையல் என்பது தவம் செய்வது மாதிரி. முனிவர்கள் அந்தக் காலத்தில் கடவுளை நினைத்து தவம் செய்தார்கள். தவத்தை வடமொழியில் தபஸ் என்பர். இதற்கு பக்குவப்படுத்துதல் என்று பொருள். பச்சைக் காய்கறிகளை பக்குவமாய் சமைத்தால் ருசியான கூட்டாகமாறுகிறது. சமைக்கும் போது மனம் அங்கும் இங்கும் ஓடாது. ஏனெனில் உப்பு போட்டோமா, புளி கரைசலை ஊற்றினோமா என்ற சந்தேகமெல்லாம் வந்து விடக்கூடாது. மனம் ஒரு நிலைப்பட்டு இருந்தால் தான் சமையல் ருசிக்கும். பொதுவாக பெண்களே சமையல் செய்வதால் அவர்கள் ஆண்களை விட அதிக வயது வாழ்கிறார்கள். காரணம் அவர்களையே அறியாமல் செய்யும் சமையல் என்னும் தவத்தால் தான். திருநெல்வேலி மாவட்டத்தில் சமையல் தொழில் செய்பவர்களை தவசுப்பிள்ளை என்று குறிப்பிடுவர். தவசு என்றால் சமையல். #coronavirus #lockdown  #meditionfood


Comments


View More

Leave a Comments