வெற்றிலையில் உள்ள நன்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்


வெற்றிலை... வெற்றி + இலை என்பதே வெற்றிலை ஆனதாக சொல்லப்படுகிறது. அதாவது வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உணவுக்குப்பின் உண்டு வந்தால் வாத, பித்த, சிலேத்துமங்களின் (திட, திரவ, நீராவி) ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்தி அவற்றால் ஏற்படும் நோயை நீக்கி உடல் ஆரோக்கியத்தை தருவதாலேயே அந்த பெயர் வந்தது. மங்கல நிகழ்ச்சிகளில் வெற்றிலை நிச்சயம் இடம்பெறும். அந்த அளவுக்கு வெற்றிலைக்கு முக்கியத்துவம் உண்டு.

வெற்றிலைக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உண்டு. வெற்றிலையை இளஞ்சூட்டில் வதக்கி சாறு எடுத்து அதை மூக்கில் இரண்டு துளி விட்டால் தலைபாரம், தலையில் நீர்த்தேக்கம் மற்றும் தலை நோய்கள் அனைத்தும் நீங்கும்.

வெற்றிலையின் வேரை வாயில் அதக்கிக்கொண்டு பாடகர்கள் அப்பியாசம் (பயிற்சி) செய்தால் தொண்டை ஒலி பெறுவதோடு தொண்டை வளம் பெரும். வெற்றிலை கொடியின் வேரையும் 2 மிளகையும் சேர்த்து சாப்பிட்டால் கருத்தடை உண்டாகும். கரு உண்டாகாது. ஆண்கள் இதை சாப்பிட்டால் விந்துவில் உயிரணு இருக்காது. ஆக, இது ஆண்களுக்கான கருத்தடை மருந்தாக விளங்குகிறது. இதேபோல் வெற்றிலையுடன் கால் அரிசி அளவு கோரோசனையை சேர்த்து சாப்பிட்டால் அது காம இச்சையை ஏற்படுத்தும். அத்துடன் தாம்பத்ய உறவு மேம்பட நினைப்பவர்கள் இதை உண்டு வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். பெண்கள் சாப்பிட்டால் ஆண்களின் மீது தீராத ஆசையை ஏற்படுத்தும். ஆக, இது ஒரு இயற்கை வயாகராவாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. இதே மருத்துவத்தை குழந்தைகளுக்கு செய்தால் இருமல், மூச்சுத்திணறல், கோழைக்கட்டு நீங்கி சுகம் பெறுவார்கள்.

நன்றி; திரு Maria Bellsin முகநூல் பதிவு


Comments


View More

Leave a Comments