
சரிவிகித கொழுப்பு, எண்ணெய் எடுத்துக்கொள்வது எப்படி?
சரிவிகித சத்துள்ள உணவுகளை உண்ணுவது குறித்தும், சரியான அளவு உப்பு சேர்த்துக் கொள்வது குறித்தும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவுறுத்தல்கள் குறித்த குறிப்புகளை கடந்த முறை பார்த்தோம்.
இப்போது கொழுப்பு மற்றும் எண்ணையை சரியானவகையில் சேர்த்துக் கொள்வது குறித்துப் பார்க்கலாம். வெண்ணெய், நெய் மற்றும் பன்றிக்கொழுப்பு போன்ற அதிக கொழுப்புச் சத்துள்ள பொருட்களை தவிர்த்து ஆலிவ், சோயா, சூரியகாந்தி அல்லது சோள எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளைப் பயன்படுத்த வேண்டும். கோழி, மீன் போன்ற வெள்ளை இறைச்சி உணவுகளைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். ஆட்டுக்கறி, மாட்டுக்கறி போன்ற சிவப்பு இறைச்சிகளை விடவும் குறைவான கொழுப்புச் சத்துகள் உள்ளன.
கொழுப்புச் சத்து குறைவாகக் கொண்ட பால், பால்பண்ணை பொருட்களைச் சாப்பிடவோ அல்லது அருந்தவோ செய்ய வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட, பொபொட்டலத்தில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.
உணவுப் பொருட்களை எப்போதுமே வேக வைத்தோ அல்லது ஆவியில் வேக வற்றோதான் சாப்பிட வேண்டும்.
இவைதான் சரிவிகித உணவுக்கான கொழுப்பு மற்றும் எண்ணெய் பயன்படுத்தும் முறைகளாகும். அடுத்ததாக
சமமான சரிவிகித அளவுகளில் இனிப்பு எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அல்லது சர்க்கரையை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
Comments