பள்ளிகள் திறக்கும் வரை சத்துணவுக்குப் பதில் அரிசி பருப்பு வழங்க அரசு உத்தரவு
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகள், அங்கன்வாடிகளில் வழங்கப்பட்ட சத்துணவும் கொடுக்கப்படவில்லை. இதனால், சத்துணவை நம்பி பள்ளிக்கு வரும் மாணவர்களின் நிலை கவலைக்கு உள்ளானது. பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவிலும், சில இடங்களில் தன்னார்வலர்களும் இணைந்து பள்ளிக்குழந்தைகளின் பசியைப் போக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய உத்தரவில், நடப்பு கல்வி ஆண்டில் 220 நாட்களுக்கு மதிய உணவு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மார்ச் மாதம் முதல் கணக்கிட்டு தொடக்கப்பள்ளி மாணவர் ஒருவருக்கு தலா 100 கிராம் அரிசி, 40 கிராம் பருப்பு, உயர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தலா 150 கிராம் அரிசி 50 கிராம் பருப்பும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Comments